விராட் கோலி.
விராட் கோலி.படம்: ஏபி

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி!

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு...
Published on

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய பேட்டர் விராட் கோலி முதலிடத்தை இழந்துள்ளார்.

முதலிடத்தை, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் கைப்பற்றியுள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் 352 ரன்கள் குவித்து நியூசிலாந்தின் டேரில் மிட்செல் தொடர் நாயகன் விருதை வென்றார்.

இந்த நிலையில், சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலியை (795 புள்ளிகள்) பின்னுக்குத் தள்ளி மிட்செல் (845 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதேபோல், இந்திய வீரர் ரோஹித் சர்மாவும் மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். 3-வது இடத்துக்கு ஆப்கானிஸ்தானில் இப்ராஹிம் சத்ரான் முன்னேறியுள்ளார்.

இந்திய வீரர்கள் ஷுப்மன் கில் 5-வது இடத்திலும், கே.எல். ராகுல் 10-வது மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் 11-வது இடத்திலும் உள்ளனர்.

Summary

Virat Kohli lost his number one ranking in the ODI format!

விராட் கோலி.
டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: உற்சாகத்தில் நியூஸி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com