ஐசிசி ஒருநாள் போட்டிகளில் சிறந்த பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை அலீஸா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 3 போட்டிகளில் 89 ரன்கள் குவித்தார். அதில் ஒரு அரைசதம் அடங்கும். இந்த தொடருக்குப் பிறகு, ஸ்மிருதி மந்தனா 790 ரேட்டிங் புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் லாரா வோல்வர்ட் 782 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், 749 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் அலீஸா ஹீலி மற்றும் ஆஷ்லே கார்டனர் முறையே இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 9-வது இடத்திலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 12-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian player Smriti Mandhana has topped the ICC ODI batsmen rankings.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

முதல் ஒருநாள்: மே.இ.தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
பாட நூலில் ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


