ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணியினர் பாகிஸ்தான் வரவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணியினர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். அங்கு லாகூரில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரையும் இழந்தது ஆஸ்திரேலிய அணி.
இந்த நிலையில், மே மாதத்தின் கடைசியில் மீண்டும் பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தப் போட்டிகள் லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் திடலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கான பேச்சுவார்த்தைகள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் மே 30 முதல் ஜூன் 5 ஆம் தேதிக்குள் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் தொடரைத் தொடர்ந்து வங்கதேசம் செல்லும் ஆஸ்திரேலிய அணி, ஜூன் 9 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணியில் பல வீரர்கள் காயமடைந்ததாலும், இளம் வீரர்கள் சரியாக விளையாடததாலும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இழந்தது. அதைத் தொடர்ந்து டி20 தொடர் உலகக் கோப்பைத் தொடரிலும் சோபிக்காத ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேவிடம் வீழ்ந்து லீக் சுற்றிலேயே வெளியேறியதும் நினைவுகூரத்தக்கது.
Summary
The Australian cricket team is set to tour Pakistan in late May to play a three-match ODI series in Lahore and Rawalpindi, PCB sources said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்; முக்கிய ஆஸி. வீரர்கள் விளையாடுவதில் சிக்கல்!
நியூஸிலாந்து ஒருநாள் தொடர்: சாம்பியன் ஆனது வங்கதேசம்!

நியூசிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்; சமனில் ஒருநாள் தொடர்!

முதல் ஒருநாள்: மே.இ.தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
விடியோக்கள்

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

