மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிரணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வார்னர் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 341 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபோப் லிட்ச்ஃபீல்டு 72 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நிக்கோலா கேரி 49 ரன்கள், சோஃபி மோலினக்ஸ் 47 ரன்கள், எல்லிஸ் பெர்ரி 44 ரன்கள் மற்றும் ஜார்ஜியா வார்ஹம் 42 ரன்கள் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் எஃபி ஃபிளெட்ச்சர் 3 விக்கெட்டுகளையும், ஸடாஃபானி டெய்லர் மற்றும் டீண்ட்ரா டாட்டின் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஹேலி மேத்யூஸ் மற்றும் கரிஷ்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஸடாஃபானியின் சதம் வீண்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஸ்டஃபானி டெய்டலர் சதம் விளாசி அசத்தினார். அவர் 129 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சின்னெல்லே ஹென்றி 38 ரன்களும், ஹேலி மேத்யூஸ் 22 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் கிம் கார்த் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆஷ்லே கார்ட்னர் இரண்டு விக்கெட்டுகளையும், நிக்கோலா கேரி மற்றும் ஜார்ஜியா வார்ஹம் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Summary
The Australian women's team won the first ODI against the West Indies by a massive 103 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3-வது டி20: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

முதல் டி20 போட்டி: நியூசி.யை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

டெஸ்ட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

2 வீராங்கனைகள் அரைசதம்..! ஆஸி.க்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


