டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் போனது ஏன் என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இந்திய டி20 அணிக்கு கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் (35 வயது) டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லாமல் இருக்கிறார். கிடைத்த வாய்ப்புகளில் மோசமாக விளையாடியதால் அவரால் மீண்டும் அந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்தப் போட்டியில் சூர்யா 18 ரன்கள் எடுத்திருந்தார்.
டெஸ்ட்டில் அதே ஆண்டு ஒரு இன்னிங்ஸில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்றதுக்குப் பிறகு பிடிஐக்கு அளித்த நேர்காணில் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:
டெஸ்ட்டில் ஒரே இன்னிங்ஸ் மட்டுமே. வாழ்க்கையில் என்ன எழுதி இருக்கிறதோ அதுதான் கிடைக்கும். நான் சிவப்பு (டெஸ்ட் கிரிக்கெட்) பந்தில்தான் கிரிக்கெட்டையே தொடங்கினேன். 10-12 ஆண்டுகள் ரஞ்சி கோப்பையில் விளையாடி இருக்கிறேன். மும்பையில் சிவப்பு பந்து கிரிக்கெட்டைச் சுற்றிதான் எல்லாமே இருக்கிறது.
வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடியதும் என்னுடைய ஆர்வம் அதன்பக்கம் சென்றுவிட்டது. அப்படிதான் டி20 கிரிக்கெட் பக்கம் வந்தேன். இருந்தும் ஒருநாள் கிரிக்கெட்டில் எவ்வளவோ முயற்சித்தும் அதில் சரியாக விளையாட முடியவில்லை. டி20 எனக்கு ஒத்துப்போனது மாதிரி எதுவும் அமையாமல் சென்றது.
2011- 2020 வரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி இருப்பதால் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன்.
ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று விதமாகவும் விளையாட வேண்டும். விக்கெட் விழுந்தால் டெஸ்ட் கிரிக்கெட் போலவும் கடைசி நேரத்தில் டி20 கிரிக்கெட் போலவும் விளையாட வேண்டும். அதனால், எனக்கு இந்த ஒருநாள் போட்டிக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னால் முடிந்ததை முயற்சிதும் சவாலானதாக அமைந்துவிட்டது என்றார்.
Summary
Would love to play Test but T20 mein \haath set hai\, says skipper Surya.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக் கோப்பையின் அதிபதி: கிரிக்கெட்டை விட 87 மடங்கு அதிக பரிசுத் தொகையுடன் களமிறங்கும் ஃபிஃபா!

இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் பாகிஸ்தான் அணி!

நேரத்தை வீணடிக்காதே என்றார்கள்... மானவ் சுதரின் கடினமான கிரிக்கெட் பயணம்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK




