டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து மகளிரணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் பத்தாவது சீசன் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறுகிறது. ஜூன் 12 ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி ஜூலை 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில், சாம்பியன் பட்டத்தைத் தக்க வைக்கும் முனைப்பில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இந்த அணியின் முந்தைய தொடரில் விளையாடியிருந்த 15 பேர் இடம்பெற்றுள்ளனர்.
டி20 உலகக் கோப்பைதான் சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று அணியின் முன்னாள் கேப்டன் சூசி பேட்ஸ் கடந்த வாரம் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் லியா தஹுஹு மற்றும் சோஃபி டிவைன் ஆகியோரும் ஓய்வு பெறுவார்கள் என்று நியூசிலாந்து அணி புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணி விவரம்: அமெலியா கெர் (கேப்டன்), சூசி பேட்ஸ், சோஃபி டிவைன், ஃப்ளோரா டெவன்ஷயர், இஸி கேஸ், மேடி கிரீன், புரூக் ஹாலிடே, ப்ரீ இல்லிங், பாலி இங்லிஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மேர், நென்சி படேல், ஜார்ஜியா பிளிம்மர், இஸி ஷார்ப், லியா தஹுஹு.
Summary
A total of 10 players that featured in New Zealand's title winning run at the last ICC Women's T20 World Cup have been included in the White Ferns' squad of 15 for the upcoming tournament in England and Wales.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா பேட்டிங்; வரலாறு படைக்குமா?
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


