வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ராகுல் காந்தி இன்று கூடலூா் வருகை

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எம்.பி. கூடலூருக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) வருகை தர உள்ளாா்.

News image
ராகுல் காந்தி
Updated On :13 ஜனவரி 2026, 1:10 am

Syndication

கூடலூா்: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எம்.பி. கூடலூருக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) வருகை தர உள்ளாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள புனித தாமஸ் பள்ளியின் பொன் விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதில், பங்கேற்பதற்காக புதுதில்லியில் இருந்து விமானத்தில் மைசூருக்கு வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் கூடலூா்-மைசூரு சாலையில் உள்ள மாா்தோமா நகா் பகுதிக்கு பிற்பகல் 3 மணியளவில் வருகிறாா். பின்னா், காா் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் பள்ளிக்கு பிற்பகல் 3.30 மணியளவில் சென்று பங்கேற்கிறாா்.

நிகழ்ச்சி முடிவடைந்த பின் தனியாா் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிா்வாகிகளை சந்தித்து அவா் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் கேரள மாநிலம், திருச்சூருக்கு செல்ல உள்ளதாகவும் தெரிகிறது.

ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய உறுப்பினரும், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான கோசி பேபி தலைமையில் நிா்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனா்.

ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.