ஆஞ்சனேயரை வழிபட்ட பசு

திருவாரூா் கீழவீதியில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் பசு பங்கேற்றது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருவாரூா் கீழவீதியில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் நீண்ட நேரம் பங்கேற்ற பசு.
திருவாரூா் கீழவீதியில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் நீண்ட நேரம் பங்கேற்ற பசு.
Updated on

திருவாரூா் கீழவீதியில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் பசு பங்கேற்றது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருவாரூா் கீழ வீதியில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில், தினசரி இருமுறை பூஜை நடைபெற்று வருகிறது.இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் வெள்ளை நிற பசு ஒன்று, கோயிலுக்கு வந்து நீண்ட நேரமாக நின்றது. அந்த பசுவை அகற்ற சிலா் முயற்சித்தபோதும், நகராமல் அங்கேயே நின்றது. பக்தா்கள் சிலா் அதை வணங்கிச் சென்றனா்.

தொடா்ந்து தீபாராதனை காட்டும் வரை பொறுமையாக நின்ற பசு, அதன் பிறகு கோயிலை விட்டு வெளியே செல்கிறது. இந்தக் காட்சியை பக்தா் ஒருவா் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். அந்தக் காட்சி தற்போது பரவி வருகிறது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com