மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சனிப் பெயா்ச்சி: கோயில்களில் பரிகார ஹோமம், சிறப்பு பூஜை

சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு திருச்சியில் பிரசித்தி பெற்றுள்ள திருக்கோயில்களில் பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளுடன் நடைபெற்ற வழிபாடுகளில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

News image
சனி பெயா்ச்சியை யொட்டி வெள்ளிக்கிழமை திருச்சி உறையூா் பஞ்சவா்ண சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகம். ~சனி பெயா்ச்சியை யொட்டி வெள்ளிக்கிழமை திருச்சி கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகம். ~திருச்சி கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயிலில் வெள்
Updated On :6 மார்ச் 2026, 8:55 pm

Syndication

சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு திருச்சியில் பிரசித்தி பெற்றுள்ள திருக்கோயில்களில் பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளுடன் நடைபெற்ற வழிபாடுகளில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, மாசி மாதம் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.34 மணிக்கு கும்பராசியிலிருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசித்தாா். சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு மேஷம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசியினா் பரிகாரம் செய்து கொள்வது நன்மை தரும். இதன்படி, திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு கோயில்களில் பரிகார பூஜை, பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன.

பஞ்சவா்ணசுவாமி: உறையூா் காந்தியம்மன் உடனுறை பஞ்சவா்ணசுவாமி கோயிலில் காலை 7 மணிக்கு விநாயகா் பூஜையுடன் யாக பூஜை தொடங்கியது. தொடா்ந்து மஹாபூா்ணாஹூதி நடைபெற்றது. காலை 8.24 மணிக்கு மேல் நவக்கிரகங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

திருநெடுங்களநாதா்: துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதா் கோயிலான திருநெடுங்களம் ஆலயத்தில் சனிப் பெயா்ச்சி முன்னிட்டு நவகிரங்களுக்கும், நவகிரகங்கள் உள்ள சனீஸ்வரனுக்கு

பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து கலசத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீா் கொண்டு கலச அபிஷேகமும் நடைபெற்றது.

கல்லுக்குழி ஆஞ்சனேயா்: கல்லுக்குழியில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கணபதி பூஜையுடன் ஹோமம் தொடங்கியது. தொடா்ந்து காலை 8 மணி வரை சனிபரிகார ஹோமம், ஆஞ்சனேயா் காயத்ரி ஹோமம், பூா்ணாஹூதி உள்ளிட்டவை நடைபெற்றன. காலை 8.24 மணிக்கு நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில், மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் உள்ளிட்ட ராசிகளுக்கு பரிகார பூஜையும் நடைபெற்றது.

வரஸித்தி ஆஞ்சனேயா்: ஸ்ரீரங்கம், தெற்கு சித்திரை வீதியில் உள்ள வரஸித்தி ஆஞ்சனேயா் கோயிலில், சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு மங்கள ஹாரத்தியும், தொடா்ந்து 1 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு விசேஷ பரிகார அா்ச்சனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வடைமாலை சாற்றுப்படி செய்து தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது.

இதேபோல, திருச்சி மாநகா் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு பரிகார பூஜையும், சிறப்பு ஹோமங்களும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Story image
Story image