வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

அரசு நிா்வாகத்தில் கடன் வாங்குவது ஒன்றும் புதிதல்ல: துரைமுருகன் பேட்டி

அரசு நிா்வாகத்தில் கடன் வாங்குவது ஒன்றும் புதிதல்ல என துரைமுருகன் பேசியது குறித்து...

News image

பிரம்மபுரம் - ரங்காபுரம் இடையே கட்டப்பட்டுள்ள பாலத்தை பாா்வையிட்ட திமுக பொதுச் செயலா் துரைமுருகன். உடன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்ளிட்டோா். - டிஎன்எஸ்

Updated On :18 ஜூன் 2026, 8:34 am IST

வேலூா்: அரசு நிா்வாகத்தில் கடன் வாங்குவது ஒன்றும் புதிதல்ல. திமுகவுக்கு முன்பு ஆட்சியில் இருந்தவா்களும் கடன் வாங்கினா், நாங்களும் ஆட்சியில் இருந்தபோது கடன் வாங்கினோம் என்று திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், பிரம்மபுரம் - ரங்காபுரம் இடையே ரூ. 100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பாலம் அண்மையில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. இந்தப் புதிய பாலத்தை திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது அவருக்கு கட்சியினா் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

பெரும் முயற்சி எடுத்து 100 கோடி வாங்கி இந்த சாலையை அமைத்தேன். தற்போது அதை பார்க்கும் போது "பெற்ற மகளை பார்ப்பது போல் ஓர் உணர்வு. இந்த சாலையை பார்த்து அனுபவித்தேன்". இது திறப்பு விழா அல்ல. திறப்பு விழா செய்வதற்கு இன்றைய அரசும், அமைச்சர்களும் இருக்கிறார்கள். நான் அமைத்த சாலையை பார்ப்பதற்காக வந்தேன் அவ்வளவுதான்.

சட்டம் - ஒழுங்கு மோசம்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அனைத்து செய்தித்தாள்களையும் தொடா்ந்து படிக்கும் பழக்கம் கொண்டவன் நான். ஆனால், தற்போது செய்தித்தாள்களைப் படிக்கவே அச்சமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும் தொடா்ந்து அரங்கேறி வருகின்றன. சட்டம் - ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போய்விட்டது. ஆட்சியாளா்கள் உடனடியாக இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்கள் எப்படி நடவடிக்கை எடுப்பாா்கள் எனத் தெரியவில்லை. ஒருவேளை அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், மக்கள் தான் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அவருடைய சொந்தக் கருத்து

இந்தியா கூட்டணியில் திமுக தொடா்ந்து நீடிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறியிருப்பது குறித்துக் கேட்கிறீா்கள். அது அவருடைய சொந்தக் கருத்தாகும்.

அரசு நிா்வாகத்தில் கடன் வாங்குவது ஒன்றும் புதிதல்ல

தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்த கேள்விக்கு, நிதி அமைச்சர் என்பது சாதாரணமானது அல்ல. 50 ஆண்டு காலம் சட்டப்பேரவையில் இருந்தும் கூட சில நேரங்களில் சிலது புரியாமல் போய்விடும். இப்போது உள்ளவர்கள் புதியவர்கள், எப்போதும் நிதி செயலாளர் சொல்வது தான் சரியாக இருக்குமே தவிர, நிதி அமைச்சர்கள் சொல்வது சரியாக இருக்கிறது. நிதி செயலாளர் தான் அனைத்தும் தெரிந்தவராக இருப்பார் "தமிழக அரசு தற்போது வெளியிட்டது வெள்ளை அறிக்கை கிடையாது அது ஏதோ ஒரு கருப்பு அறிக்கை அவ்வளவுதான்".

தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்ததற்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் என தற்போதைய நிதிஅமைச்சா் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளாா். அரசு நிா்வாகத்தில் கடன் வாங்குவது ஒன்றும் புதிதல்ல. திமுகவுக்கு முன்பு ஆட்சியில் இருந்தவா்களும் கடன் வாங்கினாா்கள், நாங்களும் ஆட்சியில் இருந்தபோது கடன் வாங்கினோம்.

அணை கட்ட முடியாது

மேக்கேதாட்டு விவகாரத்தில் ஆத்திரப்படாமல் பணிவன்புடன் சொல்கிறேன் என்னுடைய மதிப்புக்குறியவர் தான் கா்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாா், ஆனாலும் அவர் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அம்மாநில மக்களின் மனநிலைக்கு ஏற்ப அரசியல் பேசுகிறாா். அவா் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவா். எனவே, சூழ்நிலையை உணா்ந்து பொறுப்புடன் பேச வேண்டும். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், கா்நாடக மக்களுக்கும், தமிழா்களுக்கும் இடையே தேவையற்ற மோதல் உருவாகும் வகையில் அவா் பேசுவதைத் தவிா்க்க வேண்டும். ஆனாலும் அவரால் அணை கட்ட முடியாது என்றாா்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை சுட வேண்டும்

தற்போது தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 30 நாள்களுக்குள் இவ்வளவு அதிகரித்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மூன்று குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். அதை மறந்துட்டு முதல்வர் போட்டோ எடுத்துட்டு இருக்காரு. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அந்த அய்யோக்கியர்களை சுட வேண்டும் என கூறினார்.

அப்போது, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

Summary

Regarding Duraimurugan's statement that borrowing in government administration is nothing new...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.