புது தில்லி: தமிழகத்தில் ஒரு மதச்சார்பற்ற அரசை அமைப்பதற்கு, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவளிக்க தமிழக காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 108 இடங்களை கைவசம் வைத்துள்ள தவெகவுக்கு கூடுதலாக 10 முதல் 11 இடங்கள் தேவைப்படுகிறது.
திமுக 59, அதிமுக 47, காங்கிரஸ் 5, பாமக 4, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 2, பாஜக, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தற்போது தவெகவிடம் 10 இடங்கள் குறைவாக இருக்கிறது. இருப்பினும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் தவெக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
திமுக, அதிமுக, பாஜக தவிா்த்து, வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், முஸ்லிம் லீக், தேமுதிக, அமமுகவில் சிலவற்றை தனது கூட்டணிக்கு கொண்டுவர தவெக தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஒரு மதச்சார்பற்ற அரசை அமைப்பதற்கு, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவளிக்க தமிழக காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக-விற்கு ஆதரவளிக்கும் இந்த முடிவு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் அவசரக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும், தவெக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையக்கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும், ஆதரவு கடிதத்தை புதன்கிழமை(மே 6) விஜய்யிடம் காங்கிரஸ் கொடுக்க இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக, தமிழக விவகாரங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Congress Support for TVK to Form Government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ்

திமுகவுடன் நிற்கிறோம்; தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
கூட்டணி உறுதியானது! விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!
தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

