தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும்! பேரவையில் முதல்வர் விஜய் உறுதிநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
/

5 வது முறையாக புதுச்சேரி முதல்வரானார் என். ரங்கசாமி!

5வது முறையாக புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி இன்று பொறுப்பேற்றுக்கொண்டது குறித்து...

News image

என். ரங்கசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் - எக்ஸ்

Updated On :51 நிமிடங்கள் முன்பு

புதுச்சேரி சட்டப்பேரவை முதல்வராக என். ரங்கசாமி இன்று (மே 13) பொறுப்பேற்றுக்கொண்டார்.

துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் புதுச்சேரி முதல்வராக 5 வது முறையாக என். ரங்கசாமி பதவியேற்றுள்ளார்.

புதுச்சேரி அமைச்சர்களாக ஆ. நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் பதவியேற்றனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயகக் கட்சியில் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். மொத்தம் 18 இடங்களில் வெற்றி கண்டுள்ளது இக்கூட்டணி.

இதில் முதல்வர் ரங்கசாமி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதில் ஒரு தொகுதியில் ரங்கசாமி ராஜிநாமா செய்ய உள்ளார்.

அதனால், இக்கூட்டணி சார்பில் 17 எம்.எல்.ஏ.க்களின் பலம் இருக்கிறது. 30 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 16 எம்.எல்.ஏ.க்களின் பலம் இருந்தால் போதும் நின்ற நிலையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதுச்சேரி அரசு அமைந்துள்ளது.

முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழா மக்கள் பவனில் எளிமையான முறையில் நடந்தது. முதல்வர் ரங்கசாமிக்கும், அமைச்சர்களுக்கும் துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைத்தார். முன்னதாக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்திருந்த ஒப்புதலை தலைமைச் செயலர் சரத் செளகான் வாசித்தார்.

விழாவில் தேசிய பாடலான வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

Summary

N. Rangasamy Sworn in as Puducherry Chief Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.