12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஆலங்குளம், சங்கரன்கோவில் பகுதிகளில் சூரியனை சுற்றி தென்பட்ட ஒளிவட்டம்!

ஆலங்குளம், சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூரியனைச் சுற்றி புதன்கிழமை அரிய ஒளிவட்டம் தோன்றியது குறித்து...

The Halo observed around the Sun in the Alangulam areas

ஆலங்குளம், சங்கரன்கோவில் பகுதியில் சூரியனை சுற்றி தோன்றிய ஒளிவட்டம் - டிஎன்எஸ்

Published On :

ஆலங்குளம்: தென்காசி மாவட்டம் ஆலங்குளம், சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூரியனைச் சுற்றி புதன்கிழமை அரிய ஒளிவட்டம் தோன்றியதை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனா்.

ஆலங்குளம், சுரண்டை, பாவூா்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வானில் சூரியனைச் சுற்றி ஒரு அரிய ஒளிவட்டம் தோன்றியது. இந்த அதிசய நிகழ்வை அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த வியப்புடனும் ஆச்சரியத்துடனும் கண்டு ரசித்தனா்.

மேலும், கைப் பேசிகிளில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிா்ந்தனா். இந்தச் செய்தி அப்பகுதியில் வேகமாகப் பரவி, பலரையும் வானத்தை நோக்கிப் பாா்க்க வைத்தது. முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்நிகழ்வு தொடா்ந்ததாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.

சங்கரன்கோவில் பகுதியில் நண்பகல் 12 மணியளவில் சூரியன் உச்சியில் வந்தபோது, அதைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றியது. சுமாா் 20 நிமிடங்கள் வரை ஒளிவட்டம் தெரிந்ததாக அப்பகுதியினா் கூறினா். இந்த அரிய நிகழ்வை ஏராளமானோா் கண்டுகளித்தனா்.

Summary

The Halo observed around the Sun in the Alangulam and Sankarankovil areas is a 22 degree solar halo

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.