ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

மே 31-க்குள் 'உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில்' கருத்துகளை பதிவிடுக: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

மே 31-க்குள் உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்துகளை பதிவிடுமாறு மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது தொடர்பாக...

udanpirapinkural

மே 31-க்குள் "உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில்" கருத்துகளை பதிவிடுக - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Published On :

மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் இணையத்தளத்தில் பதிவிடுக என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கான காரணம் என்ன? இனி நாங்கள், நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான தங்களது பதில்களையும், கருத்துகளையும் என்னிடம் கூறுங்கள் என்று பொதுமக்களுக்கும் திமுகவினருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இதற்காக, 'உடன்பிறப்பின் குரல்' http://udanpirapinkural.in என்ற சிறப்பு இணையதளம் தொடங்கப்பட்டு, அதில் தங்களது கருத்தை பதிவிடுமாறு தெரிவிக்கப்பட்டது. அதில் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மே 31-க்குள் பொதுமக்கள், திமுகவினர் அனைவரும் தங்களது கருத்துகளை பதிவிடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில்,

அன்பு உடன்பிறப்புகளே, http://udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எந்தவிதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.

இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன்.

எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை மேற்கண்ட இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.

திமுக மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் வாட்ஸ்ஆப் குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Summary

Regarding M.K. Stalin's directive to post comments on the "Udanpirappin Kural" website by May 31...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.