மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கற்றுக்கொள்ள சிறந்த தளம் மனதின் குரல் நிகழ்ச்சி! பாஜக தலைவர் பேச்சு

ஏராளமான துறைகள் குறித்துப் பேசுவதால், கற்றுக்கொள்வதற்கு சிறந்த தளம் மனதின் குரல் நிகழ்ச்சி என பாஜக மாநில தலைவர் கருத்து...

News image

மன் கி பாத் - யூடியூப் / நரேந்திர மோடி

Updated On :26 ஏப்ரல் 2026, 4:13 pm IST

கற்றுகொள்ளவதற்கு சிறந்த தளமாக மனதின் குரல் நிகழ்ச்சி உள்ளது என பாஜக மாநில தலைவர் வீரேந்தர் சச்தேவ் இன்று (ஏப். 26) தெரிவித்தார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசியிருந்தார். இதோடு மட்டுமின்றி நாட்டின் வெண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி வளர்ச்சி, வடகிழக்கு மாநிலங்களின் மூங்கில் பொருள்கள் தயாரிப்பு குறித்தும் மோடி பேசியிருந்தார்.

இந்நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து தில்லி பாஜக தலைவர் வீரேந்தர் சச்தேவ் பேசியதாவது:

''2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசினார். அதில் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படும் என்றும், அது எத்தனை எளிமையானது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதோடுமட்டுமின்றி மிகப்பெரிய ஜனநாயகத்தில் சேகரிக்கப்படும் தரவுகள், டிஜிட்டல் முறையில் மிகவும் பாதுகாப்பாக எவ்வாறு பேணி பாதுகாக்கப்படும் எனவும் பிரதமர் பேசியிருந்தார். இது மிகுந்த பயனுள்ள தகவல்கள். இதுபோன்று பல துறைகள் குறித்தும் பேசுகிறார்.

அதனால், கற்றுக்கொள்வதற்கு மனதின் குரல் நிகழ்ச்சி விட சிறந்த தளம் வேறு எதுவும் இல்லை'' என சச்தேவ் குறிப்பிட்டார்.

Summary

No better platform for learning than Mann Ki Baat Delhi BJP President Virender Sachdev

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.