காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது குறித்து...

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - டிஎன்எஸ்

Published On :

காஞ்சிபுரம் அத்தி வரதர் புகழ்பெற்ற வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரமோற்சவ விழா வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சப்பரவாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடன் பஞ்சவர்ண மாலை தங்க வைர ஆபரணங்கள் சூடி எம்பெருமான் எழுந்தருளி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அத்தி வரதர் புகழ்பெற்ற தேவராஜ ஸ்வாமி என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா 10 நாள்கள் நடைபெறும். அந்த வகையில் புதன்கிழமை சேனை மார் புறப்பாடு தொடங்கி, வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றத்தை முன்னிட்டு, கோயில் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. கருடாழ்வாா் ஓவியம் பொறித்த கொடியானது கோயில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. கொடியேற்றத்தின் போது ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவா் வரதராஜ பெருமாள் கொடி மரம் அருகே எழுந்தருள வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விழா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பஞ்சவர்ண மாலைகள் தங்க வைர ஆபரணங்கள் சூடி சப்பர வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.

கொடியேற்றம் முடிந்ததும் பெருமாள் தங்கச் சப்பரத்தில் வீதி உலா வந்தாா்.

கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

விழாவையொட்டி, நாள்தோறும் காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாளிக்க உள்ளாா்.

விழாவையொட்டி, கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Summary

The Vaikasi Festival at the Varadaraja Perumal Temple in Kanchipuram begins with the flag-hoisting ceremony!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.