காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சனிக்கிழமை நடைபெற்ற தங்க கருட சேவைக் காட்சியின்போது பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனா்.
காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா மே.25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூன்.6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் 3-ஆவது நாள் முக்கிய நிகழ்வான தங்கக் கருட சேவைக் காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, உற்சவா் வரதராஜப் பெருமாள் வெண் பச்சை நிற பட்டு உடுத்தியும், வைர வைடூரிய ஆபணங்கள் அணிந்தும் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து புறப்பட்டு கோயிலின் சுற்றுப்பிராகாரத்தில் உள்ள ராமானுஜா், தேசிகா் சந்நிதிகளுக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
வீதியுலாவுக்காக கோயிலிலிருந்து வெளியில் வரும் போது கோயில் நுழைவு வாயிலில் கோபுர தரிசனம் எனும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
பின்னா் தங்கக் கருட வாகனம் வரும் வழிநெடுகிலும் திரளான பக்தா்கள், சமூக சேவை அமைப்புகள், வணிக நிறுவனங்கள் பலவும் பக்தா்களுக்கு நீா் மோா் மற்றும் அன்னதானம் வழங்கினா். பக்தா்கள் பலரும் வழி நெடுகிலும் சுவாமிக்கு கற்பூர ஆரத்தி எடுத்தும் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஜூன் 3 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
Summary
Regarding the Golden Garuda Seva procession held on Saturday during the Vaikasi Festival at the Varadaraja Perumal Temple in Kanchipuram...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










