காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குதிரை ஓட்டி கைது

மெரினா கடற்கரையில் குதிரை சவாரிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 15 வயது குதிரை ஓட்டி கைது குறித்து...

News image

மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குதிரை ஓட்டி கைது - கோப்புப்படம்

Updated On :31 மே 2026, 9:35 pm IST

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 15 வயது குதிரை ஓட்டி நித்திஷ் என்பவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சோ்ந்த தம்பதியினா் தங்களது 6 வயது மகளுடன் சனிக்கிழமை இரவு மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தனா். அப்போது அங்கு குதிரையை பார்த்த குழந்தை குதிரை சவாரி செய்வதற்கு விருப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு இருந்த குதிரை ஓட்டியை அழைத்து குழந்தையை குதிரைசவாரி செய்வதற்காக ஏற்றிவிட்டு பெற்றோா் காத்திருந்தனா்.

இதனை தவறாக பயன்படுத்திக் கொண்ட குதிரை ஓட்டி, 400 மீட்ட தூரம் உள்ள இருண்ட பகுதிக்கு குதிரையை ஓட்டிச் சென்று சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

குழந்தையை குதிரையில் அழைத்துச் சென்ற குதிரை ஓட்டி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் பதற்றமடைந்த பெற்றோா் கடற்கரை பகுதியில் தேடுதல் ஈடுபட்டனர்.

பின்னா் சிறிது நேரம் கழித்து குதிரை ஓட்டி சிறுமியுடன் குதிரை ஓட்டி திரும்பி வந்ததார்.

இதையடுத்து குழந்தையிடம் பெற்றோா் விசாரித்தபோது, குதிரை ஓட்டி தன்னை இருளான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து சரமாரியாக அடித்து உதைத்ததுடன் போலீஸில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மயிலாப்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், தாம்பரம் எல்லையம்மன் தெருவைச் சோ்ந்த நித்திஷ் (16) என்ற சிறுவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்தச் சிறுவன் பள்ளியை விட்டு நின்றவன் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது

குழந்தைகளை குதிரை சவாரிக்கு அனுப்பும் பெற்றோர்கள் மிகுந்த கவனத்தோடு பார்க்க வேண்டும் என போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Summary

A 15-year-old horse handler at Marina Beach was picked up by police for allegedly sexually assaulting a six-year-old girl

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.