i. அரசாங்கத்தின் பணியில் இருக்கும் அல்லது அதனிடம் சம்பளம் பெறும் அல்லது பொதுக்கடமை எதனையும் புரிவதற்காக அரசாங்கத்தால் கட்டணங்களாகவோ, தரகராகவோ பணியூதியம் வழங்கப்படும் நபர் எவரும்
ii. உள்ளாட்சி அமைப்பின் பணியில் இருக்கும் அல்லது அதனிடம் சம்பளம் பெறும் எவரும்
iii. மத்திய,மாகாண, மாநில சட்டத்தாலோ,அதன் வழியாலோ, நிறுவப்பட்ட கூட்டுருமத்தின் அல்லது அரசு நிறுவனத்தில் அல்லது அரசு நிதியுதவி பெறும் அமைப்பில் சம்பளம் பெறும் நபர்
iv. நீதிமுறை அலுவல் காரணமாக சட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்ட நபர்
v. நீதி நிர்வாகம் தொடர்பாக கலைப்பதிகாரி, சொத்துப் பேணுநர் அல்லது ஆணையர் நபர் எவரும்
vi. நீதிமன்றத்தால் அல்லது பொது அதிகார அமைப்பால் முடிவு செய்வதற்காக, அறிக்கை செய்வதற்காக குறித்தனுப்பப்பட்டவர்
vii. தேர்தல் பணிக்காக அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்
viii. பொதுக்கடமைக்காக அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்
ix. மத்திய, மாநில, மாநில சட்டத்தாலோ,அதன் வழியாலோ, நிறுவப்பட்ட கூட்டுருமத்தின் அல்லது அரசு நிறுவனத்தில் அல்லது அரசு நிதியுதவி பெற்று அவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு பதிவு பெற்ற கூட்டுறவு சங்க தலைவராக, செயலாளராக இருக்கும் நபர்
x. பணியாளர் தேர்வாணையம், வாரியம், வாரியத்தின் சார்பு தேர்வு நடத்தும் தெரிவுக்குழுவில் உறுப்பினர் எவரும்
xi. பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் எவரும்
xii. மத்திய, மாகாண, மாநில சட்டத்தாலோ, அதன் வழியாலோ, நிறுவப்பட்ட அரசு நிதியுதவி பெறும் அமைப்பில் சம்பளம் பெறும் நபர்
ஆவார்.