நீண்ட கால நல்லுறவிற்கு இதுதான் அவசியம்!

நம் வாழ்க்கையில் வரும் உறவுகள் சில, வாழ்நாள் இறுதி வரை தொடரும்; சில உறவுகள் பாதியிலே நின்று விடும். சில உறவுகள் தொடங்கிய சில வருடங்களிலே கூட நின்று விடலாம்.
நீண்ட கால நல்லுறவிற்கு இதுதான் அவசியம்!

நம் வாழ்க்கையில் வரும் முக்கியமான உறவுகள் சில, வாழ்நாள் இறுதி வரை தொடரும்; சில உறவுகள் பாதியிலே நின்று விடும். சில உறவுகள் தொடங்கிய சில வருடங்களிலே கூட நின்று விடலாம். ஒரு உறவு நீண்ட காலமாக (Long Term Relationship) தொடர வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை அன்பு, கருணை(Kindness) மட்டுமே என்று ஆராய்ச்சி ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'Journal of Personality' என்ற ஆன்லைன் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் இதுகுறித்த ஒரு ஆய்வின் முடிவை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக, உலகம் முழுவதிலும் இருந்து 2,700 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தங்களது வாழ்க்கைத் துணை அல்லது காதலரின் பண்புகள் குறித்து கேட்ட்டறிந்தனர். 

இதில், உடல் கவர்ச்சி மற்றும் பணம் ஆகியவை முக்கியமாகப் பார்க்கப்பட்டாலும் அன்பை அதிகம் பேர் எதிர்பார்க்கின்றனர் என்றும் அன்பிற்கே முன்னுரிமை அளிக்கின்றனர் என்றும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. 

மிகவும் மாறுபட்ட கலாச்சாரங்கள் தற்போது பரவி வருவதனால் இதுகுறித்த ஒரு ஆய்வை மேற்கொள்ள விரும்பி அதனை செயல்படுத்தியுள்ளோம் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறினார்.  ஆனால், கலாச்சாரம் என்னதான் வேகமாக மாறி வந்தாலும், அன்பு, காதலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்று தெரிவித்தார். 

சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட கிழக்கு நாடுகளின் மாணவர்கள் மற்றும் இங்கிலாந்து, நார்வே மற்றும் ஆஸ்திரேலியா போன்ற மேற்கத்திய நாடுகளின் மாணவர்களின் விருப்பங்களும் இதில் அடங்கியுள்ளன. 

உடல் கவர்ச்சி, நிதி தேவை, அன்பு, நகைச்சுவை, கற்பு, மதவாதம், குழந்தை ஆசை மற்றும் படைப்பாற்றல் ஆகிய பண்புகளை வைத்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இதற்காக அவர்கள் செலவு செய்யும் தொகையும் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுவாக தங்கள் மொத்த பட்ஜெட்டில் 22 முதல் 26% அன்புக்காகவும், தங்கள் பட்ஜெட்டின் பெரும்பகுதியை உடல் கவர்ச்சிக்காகவும் மற்றும் நிதி வருவாய்க்காகவும்  செலவிடுகின்றனர்.

படைப்பாற்றல் மற்றும் இதர பண்புகளுக்காக 10 சதவீதத்திற்கும் குறைவாகவே செலவிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மேற்கத்திய பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். 

ஒரு உறவு நீண்ட காலமாக தொடர வேண்டும் என்றால் அன்பு ஒன்றே அடிப்படை ஆதாரம். அன்பு செலுத்தி உங்களது உறவைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com