Enable Javscript for better performance
B B King's 94 th birth day, google celeberated his day with doodle!- Dinamani

சுடச்சுட

  

  பி பி கிங் எனும் ப்ளூஸ் இசையரசனுக்கு கூகுளின் டூடுல் பிறந்தநாள் வாழ்த்து!

  By RKV  |   Published on : 16th September 2019 11:54 AM  |   அ+அ அ-   |    |  

  b_b_king

   

  ரைலி பி. கிங் அலைஸ் பி பி கிங் ஒரு அமெரிக்கப் பாடகர் மட்டுமல்ல மிகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கிடாரிஸ்டும் கூட. கிடார் இசையே மிக மிக மென்மையானது... அதிலும் இவர் கேட்போரின் உடல் நரம்புகளை அதிரச் செய்வதான மிக மெல்லிய அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய புது விதமான இசையை கிடாரில் உருவாக்கி தனது ஆஸ்தான ஸ்டைலாக மேடைகளில் இசைக்கத் தொடங்கினார். இது அந்தக் காலத்தில் பல கிடாரிஸ்டுகளைக் கவர்ந்து புளூஸ் இசைக்கலைஞர்கள் வரிசை என இசையில் கிங்கை பின்பற்ற வைத்தது.

  பி பி கிங் தனது வயோதிகத்தில்...

  கிங் 1987 ஆம் ஆண்டில் ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் அருங்காட்சியகத்துக்குச் செல்லும் பெருமையைப் பெற்றார். அதன் பின்னரே மிகவும் செல்வாக்கு மிக்க புளூஸ் இசைக்கலைஞர்களில் ஒருவர் எனும் பெருமை கிங்குக்கு கிடைத்தது. அப்போது கிடார் இசையில் கிங் எனும் பட்டத்துக்குரிய இசைக்கலைஞர்கள் மூவர் இருந்தனர். அவர்களில் ஒருவர் எனும் பெருமை ரைலிக்கு கிடைத்தது. அதன் பின்னரே ரைலி பி கிங்... பி பி கிங் ஆனார். பி பி கிங்குடன் இணைந்து அக்காலத்தில் மேலும் புகழ்மிக்க புளூஸ் இசைக்கலைஞர்கள் இருவர் இருந்தார்கள் எனில் அவர்கள் முறையே ஆல்பர்ட் மற்றும் ஃப்ரெட்டி கிங் எனும் இருவரே. கிங்கின் புகழை மேலும் அழுத்தமாகச் சொல்லவேண்டுமெனில் இப்படிச் சொல்லலாம். வருடத்திற்கு 200 க்கும் அதிகமான இசைக்கச்சேரிகளில் பங்கேற்கும் அளவுக்கு பிஸியாக இருந்த போது கிங்கின் வயது 70. வயோதிகத்திலும் மிக அதிக அளவிலான கிடார் ரசிகர்களைப் பெற்றிருந்த கிங் 1956 ஆம் ஆண்டில் மட்டுமாக சுமார் 342 இசைக் கச்சேரிகளில் இடைவிடாமல் இசைத்துக் கொண்டிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இசையின் மீது அவருக்கிருந்த அபிரிமிதமான ஆசையையும், ஆர்வத்தையும்.

  இதையும் படிங்க... ஷெனாய் வாத்தியத்துடன் உலகம் சுற்றி வந்த இசைமேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவலைகள்...

  இத்தனைக்கும் கிங்கின் இளைமைக்காலம் அத்தனை ஒன்றும் அன்பும், அரவணைப்பும் கொட்டி முழக்கவில்லை. மிக இளம் வயதிலேயே கிங்கின் அம்மா, அவரது அப்பாவை விட்டு விட்டு வேறு ஒரு மனிதருடன் வாழச் சென்று விட்டார். கடைசியில் கிங் தனது அம்மா வழிப் பாட்டியின் பொறுப்பில் தான் வளர்ந்து வர வேண்டிய சூழல் உருவானது. அப்போதெல்லாம் ஆறுதலுக்காகவும் தன்னைத் தானே  மீட்டுக் கொள்ளவும் கிங் அருகிலிருக்கும் தேவாலயத்துக்குச் செல்வதுண்டு. அங்கு கிறிஸ்தவ மதப்பாடல்களைப் பாட காயர் எனப்படும் இசைக்குழுக்கள் உண்டு. முதலில் அவற்றின் பாடல்களிலும், இசையிலும் ஈர்க்கப்பட்டு தேவாலயப் பாடகரான கிங்குக்கு கிடாரின் மேல் ஆர்வம் மிகுதியானது அதன் பின்னரே. இப்படித்தான் கிங் உலகறியும் இசைக்கலைஞர் ஆனார்.

  இன்று பி பி கிங் எனும் புளூஸ் இசைக்கலைஞருக்கு, கிடார் இசை மன்னனுக்கு 94 ஆம் பிறந்தநாளாம்.

  அதற்காக நினைவு வைத்துக் கொண்டு கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.

  இதைக் கொஞ்சம் பாருங்க.. .ரோஜர் மூர் மறைந்தார்... ஆனால் 007 பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்க்கு எப்போதும் மரணமே இல்லை!

  இவரது கிடார் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கையில் எனக்கு மனமெல்லாம் ‘இளையநிலா பொழிகிறது’ தான் கேட்டுக் கொண்டிருந்தது. மிகச்சாதாரண இசை ஞானம் கொண்டவர்களுக்கு கிடார் இசையின் உச்சம் என்றால் அது இளையநிலா பொழிகிறது தான். எது எப்படியானால் என்ன? கிடாரைக் கண்டுபிடித்தவர்களை நிச்சயம் மெச்சிக் கொள்ளத்தான் வேண்டும். கேட்கக் கேட்க என்ன ஒரு இதம். 

  நாமும் பி பி கிங்கின் நினைவுகளைக் கொஞ்சம் மீட்டெடுப்போம்.

  kattana sevai