பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தொழில்நுட்பம் இருக்க பயமேன்? வீட்டின் பாதுகாப்புக்கு சிறந்த யோசனைகள்!

தொழில்நுட்பங்களைக் கொண்டு வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடைமுறைகள்..

News image

வீட்டின் பாதுகாப்பு - ENS

Updated On :20 ஏப்ரல் 2026, 3:47 pm IST

வீட்டை ஒரு பூட்டு போட்டு பூட்டிவிட்டுச் சென்றாலும் பல நேரங்களில் அதுமட்டும் பாதுகாப்புக்கான உறுதியை அளிப்பதில்லை.

பூட்டுகளை திறப்பது அல்லது உடைப்பது ஒன்றே, வீட்டின் பாதுகாப்பை சீர்குலைத்துவிடுகிறது.

எனவே, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உதவியோடு வீட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியம்.

முதலில், உங்கள் வீட்டை நீங்களே நோட்டமிடுங்கள். ஒரு திருடன் இடத்திலிருந்து உங்கள் வீட்டுக்குள் எவ்வாறு வரலாம், என்னென்ன பலவீனங்கள் இருக்கிறது என்பதை ஆய்வு செய்யுங்கள்.

வீட்டின் பாதுகாப்பில் இருக்கும் பலவீனங்கள் திருடர்கள் அறிவதற்கு முன் கண்டுபிடித்த சரி செய்யுங்கள்.

வீட்டைக் கட்டுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில், அதனைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்களுக்கும் கொடுக்கலாம்.

அழுத்தி தாழ்ப்பாள் போடும் வகையிலான ஸ்பிரிங் பூட்டுகளை முக்கிய கதவுகளுக்குப் பயன்படுத்த வேண்டாம்.

தற்போது பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு மிகுந்த உறுதியான டெட்போல்டு வகை பூட்டுகளைப் பயன்படுத்தலாம்.

அதிலும் குறிப்பாக வீட்டை திருடர்களிடமிருந்து பாதுகாக்க, அனைத்து வெளிப்புறக் கதவுகளிலும் 1-அங்குலத் திறப்பு கொண்ட டெட் போல்ட் பூட்டுகளைப் பொருத்தலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

360 டிகிரி கோணத்தில் இயங்கும் மற்றும் நடமாட்டங்கள் தெரிந்தால் அந்தப் பகுதியில் செய்யறிவு மூலம் திரும்பும் சிசிடிவி கேமராக்கள் வந்துவிட்டன. முக்கிய நுழைவாயிலில் அதைப் பொருத்தலாம்.

கதவுக்கும் கதவுச் சட்டத்திற்கும் இடையே இடைவெளி சிறிய சேதாரம், ஓட்டை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த இடைவெளியில் திருடன் கதவை நெம்பித் திறக்க ஒரு தூண்டுதலாக அமையக்கூடும்.

முக்கால் அங்குல ஒட்டுப்பலகை அல்லது ஒரு உலோகத் தகட்டைக் கொண்டு கதவை வலுப்படுத்துங்கள்.

குறிப்பாக வெளிப்புறக் கதவுகளுக்கு இரும்பு கேட்டுகள் பொருத்துவதும், அதன் உள்புறமாக பூட்டுகள் போடுவதும் பாதுகாப்பானதாக இருக்கும்.

உங்கள் வீட்டின் வெளிப்புறத்தில் கதவுக் கீல்கள் இருந்தால், கதவைக் கழற்றிவிட்டு, உட்புறத்தில் கீல்களைப் பொருத்துங்கள். இல்லையெனில், ஒரு திருடன் உங்கள் வீட்டிற்குள் நுழைய, கீல் முள்னை உடைத்தாலே போதுமானது.

வீட்டின் கதவு, தாழ்பாள், ஜன்னல்களில் சிறு பழுது ஏற்பட்டாலும் அதனை உடனடியாக சரிசெய்யுங்கள்.

வீட்டைச் சுற்றிலும் காலி பகுதிகள் இருந்து பாதுகாப்பு சற்று அச்சுறுத்தல் இருந்தால் நிச்சயம் வீட்டில் மதில்களில் அலாரம் வைப்பது நல்லது.

கார் நிறுத்துமிடங்கள் கதவுகளுடன் இருப்பதும், அதனை எப்போதும் பூட்டி வைப்பதும் நல்லது.

வீட்டுக்குள்தானே நிறுத்திவைக்கிறோம் என இரு சக்கர வாகனத்தை சாவியோடு விடுவது, இரு சக்கர வாகனத்தில் விலை மதிப்புள்ள பொருள்களை அப்படியே விட்டுவிட்டு செல்வது போன்றவை தவறான செயல்.

Summary

Procedures to ensure home security using technology.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.