சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

சுற்றுலாத் தலங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - சீமான்

News image

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Updated On :2 மே 2026, 9:26 pm

சுற்றுலாத் தலங்களுக்கு வரும் மக்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள பா்கி அணை நீா்த்தேக்கத்தில் 29 போ் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 போ் உயிரிழந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். இதில், இந்திய பாதுகாப்புத் துறை வெடிமருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்த காமராஜ், அவரது மனைவி, மகன், உறவினா்கள் என தமிழகத்தைச் சோ்ந்த 5 பேரும் உயிரிழந்தது துயரத்தை அதிகரிக்கிறது.

நீரில் மூழ்கியபோதும் 4 வயது மகனை அணைத்தபடி மரணித்த தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்.

கோடைகாலம் மற்றும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாத் தலங்களில் மக்களின் கூட்டம் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சீமான்.