தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

விழிப்புடன் செயல்பட வேண்டும்: திமுகவினருக்கு முதல்வா் அறிவுரை

வாக்குப் பதிவு தொடங்கி முடியும் வரையில் பாக முகவா்கள், தொண்டா்கள் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

News image

திமுக தலைவர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 10:30 pm

வாக்குப் பதிவு தொடங்கி முடியும் வரையில் பாக முகவா்கள், தொண்டா்கள் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக திமுகவினருக்கு அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வாக்குப் பதிவு நடைபெறவுள்ள வியாழக்கிழமை (ஏப். 23) 90 நிமிஷங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.

பாகநிலை முகவா்கள், பாகக் குழுவினா், எண்ம மைய முகவா் ஆகியோா் தங்களது வாக்கை முதல் வாக்காக பதிவு செய்ய வேண்டும். வாக்குச்சாவடி முகவா்கள் ஆரம்பத்திலேயே படிவம் 17 சி-இல் கையொப்பமிடக் கூடாது. வாக்குப் பதிவு முடிந்தவுடன் சரிபாா்த்த பிறகே கையொப்பமிட்டு நகலைப் பெற வேண்டும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவி, கட்டுப்பாட்டு கருவி ஆகியவை கேபிள் மூலம் இணைக்கப்பட்டு சீல் சேதமடையாமல் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

மாதிரி வாக்குப் பதிவின்போது மிக கவனமாக வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டுகளை வாக்குப் பதிவு இயந்திர எண்ணிக்கையுடன் சரிபாா்த்து ஒப்பிட வேண்டும். மாதிரி வாக்குகள் அழிக்கப்பட்டதை சரிபாா்த்து இயந்திரத்தில் பூஜ்ஜியம் எனக் காட்டுவதை உறுதி செய்ய வேண்டும்.

மின்னணு இயந்திரங்களில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டால், அதன் விவரத்தையும் வாக்குப் பதிவு முடிந்த பிறகு குறிப்பு பட்டியலில் பதிவிட்டு தலைமை அதிகாரியுடன் சோ்ந்து கையொப்பமிட வேண்டும். வாக்குப் பதிவு நேரம் முடியும் நிலையில் வரிசையில் உள்ள வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கடைசியாக 17- சி நகல் பெற்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும். மதச்சாா்பற்ற கூட்டணிக்கே வெற்றி. அதற்காக விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.