விபத்துகள் என்பது பொதுவாக சாலைகளில் நிகழ்ந்தாலும், முதியவர்கள், குழந்தைகள் போன்றவர்கள் இருக்கும் வீடுகளில் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் அவசியம்.
பொதுவாக சில வீடுகளின் அமைப்பே அப்படி இருந்துவிடும். மேடுபள்ளமான தரைப்பகுதி, கூர்மையான படிகட்டு முனைகள், கணிக்க முடியாத தடுப்புகள் போன்றவை புதிதாக வீட்டுக்குள் வருபவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.
தரைப்பகுதியில் சில டைல்ஸ்கள் ஆடும் வகையில் இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும்.
அனைத்து அறைகளிலும் சரியான வெளிச்சம் பரவுக்கூடிய விளக்குகளை பொருத்துவது அவசியம். எந்தவொரு இடத்தையும் இருட்டாக வைத்திருக்க வேண்டாம்.
அவ்வப்போது வீட்டின் மின் அமைப்பை ஆய்வு செய்து கொள்ள வேண்டும். மின் சுவிட்சுகளில் மின்சாரம் பரவினால் அதனையும் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
எங்குமே அதிக மின்சாரம் வருவதில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
சில வேளைகளில் மின் ஒயர்கள் கருதும் வாசம் வரும். அதனை உடனடியாக மின் ஊழியர்களுக்கு தகவல் சொல்லி சரி செய்ய வேண்டும்.
வீட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பின், நிச்சயம் பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.
முக்கிய பகுதிகளில் வீடு அமைந்திருந்தால், நிச்சயம் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும். வீட்டைச் சுற்றி நடப்பதையும் கண்காணிக்க வேண்டும்.
அக்கம் பக்கத்தினருடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடக் கூடாது.
நமது வீட்டில் ஏதேனும் பிரச்னை என்றால், வீட்டில் ஆள் இல்லாதபோது சிக்கல் ஏற்பட்டால் உதவிக்கு அவர்கள் ஓடி வருவதும் முக்கியம்.
தரையில் எங்காவது நீர் சிந்தினால் உடனடியாக அதனைத் துடைக்க வேண்டும்.
கழிப்பறைகள் எப்போதும் ஈரமாக வழுவழுப்பாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உடையில் நிலையில் கண்ணாடி ஜன்னல்கள் இருந்தால் அதனை முன்கூட்டியே அப்புறப்படுத்திவிடலாம்.
முதியவர்கள் இருக்கும் வீடுகளில் ஈரம்கூட விபத்துகளை ஏற்படுத்தலாம்.
Summary
Accidents can happen not only on the roads but also at home, so here are some ways to prevent them.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்!

தொழில்நுட்பம் இருக்க பயமேன்? வீட்டின் பாதுகாப்புக்கு சிறந்த யோசனைகள்!

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு

தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற 7 வழிகள்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


