மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நான்-ஸ்டிக் பயன்படுத்தலாமா? வாங்கிய பாத்திரத்தை என்ன செய்வது?

நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது பற்றியும் பாத்திரத்தை கையாள்வது குறித்தும்

News image

நான்-ஸ்டிக் பாத்திரங்கள் - ANI

Updated On :4 மார்ச் 2026, 10:55 am IST

நான்- ஸ்டிக் பாத்திரங்களில் தரமான பாத்திரங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும், சாதாரண நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதையெல்லாம் கேட்டு ஏற்கனவே வாங்கி பயன்படுத்தி வரும் நான் ஸ்டிக் பாத்திரங்களை பெரும்பாலானோர் தூக்கி எறியப்போவதில்லை.

எனவே பாதுகாப்பான முறையில் நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

அதற்கான எளிய குறிப்புகள்..

நான் ஸ்டிக் பாத்திரங்களை மிதமான தீயில்தான் பயன்படுத்த வேண்டும்.

உபயோகிக்கும் முன்பும் பின்பும் மிருதுவான துணி அல்லது ஸ்பாஞ்ச் கொண்டுதான் துடைக்க வேண்டும். கடினமான பொருள்களைக் கொண்டு தேய்க்கக் கூடாது.

உபயோகிப்பதற்கு முன்பு சமையல் எண்ணெயை தடவுவது அவசியம்.

ஸ்டீஸ், இரும்புக் கரண்டிகளைப் பயன்படுத்தக் கூடாது, மரம், பிளாஸ்டிக் கரண்டிகளைப் பயன்படுத்துவது சிறந்தது.

சாதாரண பாத்திரங்களுடன் சேர்த்து நான்-ஸ்டிக் பாத்திரங்களைக் கழுவக் கூடாது. கீறல் விழக்கூடாது.

சமைக்கும் பொருள் எதுவுமின்றி நான்-ஸ்டிக் பாத்திரம் அதிக நேரம் தீயில் இருக்கக்கூடாது.

இந்தப் பாத்திரத்தை உபயோகிக்கும் முன்பும் பின்பும் கண்டிப்பாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

நான்-ஸ்டிக் பாத்திரங்களை அதற்கென உள்ள ஆணியில் மாட்டி பாதுகாக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.