வீடுகளில் இப்போதெல்லாம் ஏசிகள் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை உருவாகி வருகிறது. அதிலும் சாதாரண வீடுகளில்கூட அறைக்கு ஒரு ஏசி என மாறிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில் நவ நாகரீக வீடுகளுக்கு இப்போது ஃவைபை ஏசி, செல்போன் செயலி மூலம் இயக்கும் ஏசி என பல ஸ்மார்ட் ஏசிகள் வந்துவிட்டன.
வழக்கமாக ஏசிகள் என்றால், அறைக்குள் சென்றதும் நாம்தான் அதனை இயக்க வேண்டும். உறங்கிக் கொண்டிருக்கும்போது குளிர் அதிகமாக இருந்தால் எழுந்து ரிமோட்டைத் தோடி குளிரைக் கட்டுப்படுத்தவோ, குறைவாக இருந்தால் அதிகமாக்கவோ வேண்டும்.
தற்போது ஸ்மார்ட் வைஃபை ஏசிகள் வந்துவிட்டன. அதனை உங்கள் செல்போன் அல்லது வீட்டில் உள்ள தொலைபேசியுடன் இணைத்துவிட்டால் நீங்கள் எங்கிருந்தும் அதனை இயக்கலாம். நாம் வீட்டுக்கு வருவதற்கு முன்பே ஏசியை ஆன் செய்ய ஷெட்யூல் வைத்துவிடலாம். எந்த மோடில் இயங்க வேண்டும் என்பதையும் முன்கூட்டியே நிர்ணயித்துவிடலாம்.
அது மட்டுமல்ல, இந்தியாவிலும் கூட, சில மாநிலங்களில் குளிர் அதிகம் இருக்கும் என்பதால் இப்போது ஹாட் அன்ட் கோல்டு என இரண்டுக்கும் பயன்படும் ஏசிகளும் வந்துவிட்டன.
சில ஏசிகள், செயலிகள் மற்றும் அலெக்ஸா போன்று குரல் மூலம் கட்டளையிட்டால் செயல்படும் வகையிலும் வந்துவிட்டன.
இன்னும் ஒருபடி மேலே போனால், ஒருவர் அறையில் இருக்கிறார் என்பதை உணரும் ஏசிகளும் வந்துவிட்டனவாம். அவை அறையிலிருந்து அனைவரும் வெளியேறியதும் குளிர்நிலையை கட்டுப்படுத்திவிடுமாம். அதுபோல அறையில் அதிகமானோர் இருந்தாலும் அவற்றுக்கு ஏற்ப செயல்படுமாம்.
சில ஏசி தயாரிப்பு நிறுவனங்கள், இந்த அனைத்து வசதிகளையும் கொண்ட பயனருக்கு ஏற்ற விலைகளிலும் இப்போது விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளன.
எனவே, வீட்டுக்கு ஏசி வாங்குவதாக இருந்தால், ஏதோ ஒரு ஏசியை வாங்கி வராமல், இதுபோன்ற ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் கொண்ட ஏசிகளின் விலைகள் மற்றும் அதன் பயன்களையும் அலசி ஆராய்ந்துவிட்டு முடிவெடுப்பது சாலச் சிறந்தது.
Summary
Voice-controlled AC to cope with summer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெய்யிலை சமாளிக்க சிறந்த ஏர்கூலர்! தள்ளுபடி விலையில்!
ஏசி மெக்கானிக் வேடத்தில் வீடுகளில் கொள்ளையடித்த நபா் கைது
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து! நிவாரணம் அறிவித்த பிரதமர்

வெயிலை சமாளிக்க 3 வேளை குளியல்! மறுவாழ்வு மையத்தில் யானைகள் குளுகுளு! | Trichy
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




