முகத்தை கவனிக்கும் அளவுக்கு கை கால்களை யாரும் கவனிப்பது இல்லை. அதுவும் குறிப்பாக பாதங்கள். அழகான மென்மையான பாதங்கள் பெற என்ன செய்யலாம். இதோ குறிப்புக்கள்:
பாதங்களை நன்றாக கழுவவும். ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்யவும்.
தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு ஆகியவற்றைப் போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
அதன் பிறகு மெல்லிய பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வரவும். பளிச் பாதங்களை நீங்களே காண்பீர்கள்.
இதன் அடுத்த கட்டம், பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய காட்டன் துணியால் துடைத்துவிட்டு, நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவுங்கள்.
பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்புள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.
காலில் காய்ப்பு, தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக அத்தழும்பு மறைந்து விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


