மன அழுத்தம் குறைய மாதுளம் பழ ஜூஸ்!

இவற்றில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் காம்பவுண்டுகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் செரட்டொனின் ஏற்பிகளைத் தூண்டி நமது மனதை சாந்தப் படுத்தி வாழ்வைப் பற்றிய எதிர்மறைக் கண்ணோட்டத்தை முறியடிக்கிறதாம்.
மன அழுத்தம் குறைய மாதுளம் பழ ஜூஸ்!
Published on
Updated on
1 min read

மன அழுத்தம் இருப்பவர்கள் மாதுளம் பழ ஜூஸ் தான் குடிக்கணுமாம்!

தேவையான பொருட்கள்:
மாதுளம் பழம்: 1 அல்லது 2
எலுமிச்சை சாறு: 1 டேபிள் ஸ்பூன்
பனங்கல்கண்டு: 4 அல்லது 5 டீஸ்பூன்
உப்பு: 1 சிட்டிகை
ஐஸ் கியூப் கட்டிகள்: 3 அல்லது 4
புதினா இலைகள்: 4 அல்லது 5 (அலங்கரிக்க)

செய்முறை:

மாதுளம் பழத்தை தோல் உரிப்பதே ஒரு கலை தான். நன்கு கனிந்த மாதுளம் பழங்களை எடுத்துக் கொண்டு மேலே காம்புப் பகுதியில் கத்தியால் லேசாகக் குடைந்தால் போதும், அப்படியே முழுப் பழத்தையும் உள்ளிருக்கும் முத்துக்களுக்கு எந்த விதச் சேதாரமும் இல்லாமல் உரித்து எடுத்து விடலாம். பிறகு முத்துக்களை உதிர்த்து எடுத்து கொண்டு அவற்றை அப்படியே ஜூஸரில் கொட்டவும், இவற்றோடு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, நான்கைந்து டீஸ்பூன் பனங்கல்கண்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஜூஸரில் அரைத்து எடுத்துக் கொண்டு ஐஸ் கியூப்கள் சேர்த்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே அலங்காரமாக நான்கைந்து புதினா இலைகளை மிதக்க விட்டுப் பரிமாறலாம். குழந்தைகளுக்கு எனில் ஜூஸ் வடி கட்டுவதற்கு என்றே இருக்கும் பெரிய வடிகட்டியில் வடிகட்டி விட்டுத் தரலாம். ஏனெனில் மாதுளையின் முத்துக்கள் தொண்டையில் சிக்கிக் கொண்டு சில சமயங்களில் குழந்தைகளுக்கு புரையேறக் கூடும். 

மாதுளம் பழத்துக்கும் மன அழுத்தத்துக்கும் என்ன சம்மந்தம்?

மாதுளம் பழத்தை ஜூஸாகவோ அல்லது பழமாகவோ எப்படியும் சாப்பிடலாம். எப்படிச் சாப்பிட்டாலும் மன அழுத்தம் குறைகிறதென்று ஒரு ஜப்பானிய பல்கலைக் கழக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்திருக்கிறது.

பொதுவாகவே மாதுளம் பழத்தில் நமது உடன் நலனை மேம்படுத்தக் கூடிய ஆண்ட்டி ஆக்சிடண்டுகள் அதிகமிருக்கின்றன. இவற்றில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் காம்பவுண்டுகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் செரட்டொனின் ஏற்பிகளைத் தூண்டி நமது மனதை சாந்தப் படுத்தி வாழ்வைப் பற்றிய எதிர்மறைக் கண்ணோட்டத்தை முறியடிக்கிறதாம்.

இதனால் போதிய தன்னம்பிக்கை உணர்வும், நேர்மறை எண்ணங்களும் அதிகரித்து மன உளைச்சல் மற்றும் அழுத்தத்தில் இருந்து நம்மால் எளிதில் வெளிவர முடிகிறது என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com