ஜப்பானியர் விரும்பிச் சாப்பிடும் பச்சை மீன் உணவு இதுதான்!

ஜப்பானியர் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை பெரிதும் விரும்புபவர்கள். சுறுசுறுப்புக்கும்
ஜப்பானியர் விரும்பிச் சாப்பிடும் பச்சை மீன் உணவு இதுதான்!

ஜப்பானியர் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை பெரிதும் விரும்புபவர்கள். சுறுசுறுப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் பெயர் பெற்றவர்கள் அவர்கள். ஒல்லியான அதே சமயம் உறுதியான உடல்வாகைக் கொண்டவர்கள் அவர்கள். தொப்பை பிரச்னை அவர்கள் நாட்டில் அதிகம் கிடையாது. 

ஜப்பானியரின் உணவுப் பட்டியலில் காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள் மீன், முட்டை, கடற்பாசி, சோயா, அரிசி, கிரீன் டீ போன்றவை நிச்சயம் இடம்பெற்றிருக்கும். இறைச்சி மற்றும் பால் பொருட்களை அவர்கள் ‌மிக‌க் குறை‌ந்த அள‌வில் மட்டுமே உட்கொள்கின்றனர்.

ஜப்பானியர்களின் சமைக்கும் முறையும் சற்று வித்தியாசமானது. எந்தந்த உணவை எப்படிச் சமைக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஒரு பழக்கம் உள்ளது. சில உணவை வேக வைத்து உண்பார்கள். சிலவற்றை தீயில் வாட்டினால் போதுமானது. குறைந்த தீயில் மிகக் குறைந்த அளவு எண்ணெயைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களை வறுத்து சாப்பிடுவார்கள். பச்சையாக இருக்கும் மீன் வகை ஷாஷிமி (sashimi) என அழைக்கப்படுகிறது.

சல்மோன் மீன் வகைகளும் பெரும்பாலும் ஜப்பானியர்களால் பச்சையாகவே உண்ணப்படுகிறது. லேசான புகை காட்டப்பட்ட விலாங்கு மீன் வகையை 'உனாங்கி' என அழைக்கக்கிறார்கள். ஃபுகு என்ற ஒரு வகை ஷாஷிமி உணவு பஃப்பர் மீனிலிருந்து செய்யப்படுகிறது. ப்ஃப்பர் மீனின் உடலில் சில பாகங்களில் உள்ள விஷம் தசைகளை மரத்துப் போக வைக்குமாம். இது உயிருகே ஆபத்தானது. ஆனாலும் ஷாஷிமியை முறையாக தயாரித்து உண்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் ஜப்பானியர். 

ஷாஷிமி என்பது நறுக்கப்பட்ட, சமைக்காத, குளிர்விக்கப்பட்ட இறைச்சி அல்லது மீன். ஷாஷிமி என்பதற்கு அர்த்தம் துளைக்கப்பட்ட இறைச்சி. ஷாஷிமி செய்யப்படும் மீன்கள் தூண்டில்கள் மூலம் பிடிக்கப்பட்டவுடன், அவை உயிருடன் இருக்கும்போதே, ஒரு உலோக கம்பியில் குத்தி வைக்கப்படுகின்றன. ஷாஷிமிக்கு சூரை, சால்மன், சங்கரா, கணவாய், கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாட்டிறைச்சியும் சிக்கனும்கூட இதில் பயன்படுத்தப்படும். 

ஜப்பானியரின் உணவின் தொடக்கத்தில் இவை பரிமாறப்படும். இந்த உணவின் ஒரு பகுதியாக மீசோ சூப், அரிசி சாதத்துடன் பரிமாறுவார்கள். ஷாஷிமி வகை உணவை உண்பதற்கு முன் முக்கியமாக இருக்க வேண்டியது சுவைச்சாறும் (கிச்சாப்) 'வசாபியும்' (காரமானச் சாறு). ஷாஷிமி சோயா சாஸிலும் முக்கியெடுத்து பரிமாறப்படும்.  கரிப்பு சுவைக்காக 'கிச்சாப்பை' தெளித்துக் கொள்வதற்காக பயன்படுத்துவார்கள். சில வேளைகளில் காரச் சாறுடன் (வசாபி) 'கிச்சாப்பை' கலந்துவிடுவார்கள். வசாபியின் மிகுந்த காரச் சுவையுடையது. 

ஷாஷ்மி​ மீன் உணவின் ஆரோக்கிய பலன்கள்

சமைக்காத மீன்கள் ஆரோக்கியமானவையே. ஆனால் அதில் சில சிக்கல்கள் உள்ளன. வாசாபியுடன் சாப்பிட்டால் பாக்டீரியா தொடர்பான சிக்கல்கள் சரி செய்யப்படும். இதை மீசோ சூப் சாதத்துடன் முழு உணவாக சாப்பிடும்போது அதில் மொத்தமுள்ள சோடியம் அளவுக்கு அதிகமாக இருக்கும்.

ஷாஷ்மி ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும் வேக வைத்து உணவுகளை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் உண்மைதான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com