
தேவையானவை:
வாழைத்தண்டு - ஒரு துண்டு
பாசிப்பருப்பு - அரை கிண்ணம்
சின்ன வெங்காயம் - 8
பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
பச்சை வேர்க்கடலை - கால் கிண்ணம்
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
நெய், பால் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாழைத்தண்டை நாரெடுத்து மிகவும் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை மலர வேகவிடவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். பச்சை வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மண் சட்டியில் அல்லது அடி கனமான வாணலியில் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து... நறுக்கிய வாழைத்தண்டு, வேக வைத்த பச்சை வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் நெய்யில் வறுத்த சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, பால் கலந்து பரிமாறவும்.
- கா.அஞ்சம்மாள், ராமநாதபுரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.