‘என் கணவன் என் தோழன்’ என்றொரு தொடர் விஜய் டி.வி யில் ஒளிபரப்பாகிறது. இல்லத்தரசிகள் பலருக்கும் பிடித்தமான தொடர். தொடரை விட இதில் நடித்திருக்கும் ஹீரோ சூரஜ், ஹீரோயின் சந்தியா இருவரும் பல வருடங்களாக ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஜோடிகளாக இருந்து வந்தார்கள். சில வாரங்களுக்கு முன் இந்த ஜோடிக்கு நடுவே படப்பிடிப்பின் போது நடந்த சிறு மனஸ்தாபம் முற்றி இனி இவர்கள் இருவரும் சேர்ந்த்து நடிப்பதாக இல்லை எனும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். தொடரில் ரீல் ஜோடிகளாக இருந்தாலும் இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை ரசித்துப் பார்த்து சீரியலை டி.ஆர்.பி யில் ஹிட் அடிக்க வைத்த இந்த தொடரின் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமளிக்கும் செய்தியே!
‘குஷி’ பட ஜோதிகா போல சில வாரங்களுக்கு முன் இந்தத் தொடருக்கான படப்பிடிப்பின் போது சூரஜாக நடுத்த ஹீரோ (ரஷித் அனாஸ்) தன்னை முறைகேடாகத் தொட்டார் எனக்கூறி ஹீரோயின் சந்தியா( தீபிகா சிங்) பெரும் மனவருத்தத்தில் இருந்தார். சும்மாவே மனவருத்தத்தில் இருக்கும்போது, உடன் நடித்த மற்றொரு சக நடிகை கனிகா மஹேஸ்வரி சந்தியாவிடம் சூரஜைப் பற்றி மேலும் மோசமாகப் பேச, கடைசியில் இந்தச் சம்பவத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்புக் குழுவினர் நடுவே சந்தியா சூரஜைக் கன்னத்தில் அறையும் அளவுக்கு சென்று விட்டது. இப்படி ஒரு மோசமான நிலையில் அடுத்தடுத்து நடைபெற்ற படப்பிடிப்புகளின் போது சூரஜும், சந்தியாவும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லையாம். கடைசியில் இந்தப் பிரச்சினை; இனி எப்போதும் இருவரும் சேர்ந்து நடிப்பதாக இல்லை என்பதில் வந்து முடிந்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

திருப்போரூா் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

எதிா்க்கட்சிகளின் மாற்றம் முழக்கம், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரியும்: அமைச்சா் துரைமுருகன்

மீண்டும் தமிழக முதல்வராவாா் மு.க.ஸ்டாலின்: கே.பாலகிருஷ்ணன்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


