எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ்!

மொஸில்லா ஃபயர்பாக்ஸ் நிறுவனத்தினர் தற்போது வெளியிட்டுள்ள புதிய புரௌசர் ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ். இந்த புரௌசர் ஐபோன் பயனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறினால், அது மிகையாகாது.

News image
Updated On :14 டிசம்பர் 2016, 10:38 am

ஒய்.டேவிட் ராஜா

மொஸில்லா ஃபயர்பாக்ஸ் நிறுவனத்தினர் தற்போது வெளியிட்டுள்ள புதிய புரௌசர் ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ். இந்த புரௌசர் ஐபோன் பயனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறினால், அது மிகையாகாது. 
இதில் விளம்பரங்களைத் தானாகவே பிளாக் செய்யும் ஆப்சன், புரௌசர் ஹிஸ்ட்ரியை அவ்வப்போது தானாகவே டெலிட் செய்யும் ஆப்சன், அதேபோல் அவ்வப்போது குக்கியை க்ளியர் செய்யும் ஆப்சன் ஆகியவை உள்ளன. 
நாம் பயன்படுத்தும் பல்வேறு புரௌசர்களில் நமக்கு அதிகபட்ச எரிச்சலை தருவது விளம்பரங்கள்தாம். இந்த தொல்லையில் இருந்து விடுபடத்தான் தற்போது வெளிவந்துள்ளது மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் புரௌசர். 
இதில் உள்ள முக்கிய அம்சமே விளம்பரங்களை பிளாக் செய்யும் டிராக்கர் சாப்ட்வேர் தான். இந்த சாப்ட்வேர் விளம்பர நிறுவனங்கள் நம்முடைய ஐபியை டிராக் செய்யாமல் தடுப்பதால் நாம் ஏற்கனவே பார்த்த விளம்பரங்கள் தொடர்ந்து நம்மை தொல்லைப் படுத்தாது. அதுமட்டுமின்றி, எளிமையான எளிதில் லோட் ஆகும் தன்மை இருப்பதால் நாம் விரும்பும் பக்கத்தை உடனே திரையில் பார்க்க முடியும். 
பயன்படுத்துபவர்களுக்கு எளிமையானது, டேட்டா அதிக செலவில்லாமல் லோட் ஆகும் தன்மை, பிரவைசி பாதுகாக்கப்படுவது, ஆன்லைன் தாக்குதலை எதிர்க்க பவர்புல் சாஃப்ட்வேர் ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன.
இந்த மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் பிரௌசரை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவசமாக டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த புரௌசர்  ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு மாடலுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.