மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சென்னையில் டிசம்பர் 16 வெள்ளியன்று பைசைக்கிள் இரவு!

மார்கழிக் குளிரில் ஓசோன் கடற்காற்றை நுரையீரல் நிறைக்க இழுத்தவாறு ஆனந்தமாய் ஒரு சைக்கிள் பயணம்! இடையிடையே கொஞ்சம் டீ, கொஞ்சம் ஸ்னாக்ஸ். பின்னே கசக்குமா!

News image
Updated On :16 டிசம்பர் 2016, 6:15 am

DIN

நிலவொளியில் கடலலை தாலாட்ட இரவு நேர சைக்கிள் பயணம்!

வர்தா புயலாகட்டும், வானமே இடிந்து விழும் பெரு மழை வெள்ளக் காடாகட்டும்
அத்தனையையும் சில நாட்களில், சில வாரங்களில் துடைத்துப் பெருக்கி ஓரம் கட்டி விட்டு வந்தாரை தொடர்ந்து வாழ வைத்துக் கொண்டிருக்கும் சென்னை எப்போதும் அழகு தான்!. அதிலும் இரவில் சென்னை அழகோ அழகு! சென்னையின் அழகு மிக்க இடங்களில் ஒன்றான கிழக்குக் கடற்கரைச் சாலையில் ’பை சைக்கிள்’ குழுவினர் மீண்டும் ஒரு சைக்கிள் இரவுக்கு திட்டமிட்டிருக்கிறார்கள். இது ஒரு தொடர் நிகழ்வு தான். இந்த முறை அது இன்று இரவில் நடக்கவிருப்பதாகத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. பெளர்ணமி இரவென்றால் இந்த சைக்கிள் பயணம் இன்னும் அருமையானதாக இருந்திருக்கும். ஆனாலும் பரவாயில்லை நாட்கள் கடந்து விடவில்லை. தேய்பிறையின் தொடக்கம் தான். சில்லென்ற மார்கழிக் குளிரில் ஓசோன் கடற்காற்றை நுரையீரல் நிறைக்க இழுத்தவாறு ஆனந்தமாய் ஒரு சைக்கிள் பயணம்! இடையிடையே கொஞ்சம் டீ, கொஞ்சம் ஸ்னாக்ஸ். பின்னே கசக்குமா! விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்து கொண்டு புறப்பட ஆயத்தமாகலாம். 

நேரம்: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 16, இரவு 9.30 மணி.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்: TAME-Tent N Trek.

பயணத்திற்கு வாட்ஸப் மூலமாக இந்த எண்ணில் பதிவு செய்யலாம்: 09500407464
மின்னஞ்சல் முகவரி:  info@tentntrek.com
பயணக் கட்டணம்: நபர் ஒருவருக்கு ரூ.799 (சைக்கிள் வாடகை, ஹெல்மெட், டீ,ஸ்னாக்ஸ், ஐஸ்கிரீம் எல்லாவற்றுக்கும் சேர்த்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.