2011 சட்டமன்றத் தேர்தலின் போது வடிவேலு தி.மு.க வுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் அந்தத் தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைந்தது. வடிவேலு தி.மு.க ஆதரவுப் பிரச்சாரத்தில் எதிரணித் தலைவர்களை குறிப்பாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோரை மிகக் கடுமையாக விமரிசித்திருந்தார். அப்போது தே.மு.தி.க ஆளுங்கட்சியான அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருந்ததால் அடுத்த சில ஆண்டுகளுக்கு வடிவேலுவின் சினிமா வாய்ப்புகள் அஸ்தமித்தன. அதனால் சில ஆண்டுகளுக்கு வடிவேலு தமிழ் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தான் அவரது வாய்ப்புகள் அஸ்தமித்தனவா என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக வடிவேலு:
அப்படியெல்லாம் இல்லை. அந்த நேரத்திலும் ரஜினியின் ‘லிங்கா’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணமே இருந்தன. ஆனால் அந்தப் படங்களில் எனது நகைச்சுவைக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்று நான் நினைத்த காரணத்தால் அந்த வாய்ப்புகளை ஒப்புக் கொள்ளவில்லை என்பதே நிஜம். ஆனால் கடவுள் விஷாலின் ‘கத்திச் சண்டை’ மூலமாக மீண்டும் ஒரு நல் வாய்ப்பை அளித்திருக்கிறார். எனது திரைப்பட வாழ்க்கையில் இனி ஒரு தடங்கல் நிகழ வாய்ப்பில்லை, இனி தமிழக மக்களை எனது நகைச்சுவையில் திணறடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அரசியல் ஆசைகள் எல்லாம் பழங்கதைகள் ஆகட்டும். இனி எப்போதும் அரசியல் பக்கம் திரும்புவதாக இல்லை. என்றார்.
கத்திச் சண்டை மட்டுமல்ல அடுத்ததாக ‘இம்சை அரசன் 2’ மற்றும் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்க இன்னும் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றிலும் வடிவேலு நடிக்க இருக்கிறாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


