மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கணவரைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் பேருந்தில் பிரசவமான பெண்! 

பிரசவத்தின் போது தன் கணவரும் உடனிருக்க வேண்டும் என்பது உலகப் பெண்களின் ஒருமித்த ஆசை! சிலருக்கு அந்த ஆசை பூ மலர்வதைப் போல வெகு எளிதாக நிறைவேறி விடும். சிலருக்கு இப்படி சாகஷம் எல்லாம் செய்ய வேண்டியாதாகி

News image
Updated On :10 நவம்பர் 2016, 5:47 am

திருவண்ணாமலை மாவட்டம் போலுரைச் சேர்ந்த சத்யாவுக்கும் படாகத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் குமாருக்கும் திருமணமாகி இருவரும் மேல்மலையனூரில் வசித்து வந்தனர். சத்யா கருவுற்றதும் ஏழாம் மாதம் வளைகாப்பு நடத்தப்பட்டு தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டார். குமார் அவரால் முடிந்த போது மனைவியின் தாய் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து வந்தார். எல்லாம் சரியாகவே சென்று கொண்டிருந்த போது; கடந்த சில வாரங்களுக்கு முன் சத்யாவுக்கும் குமாருக்கும் இடையே ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டால் குமார், சத்யாவை அவரது தாய் வீட்டில் சென்று காண்பதும், அவரோடு பேசுவதும் நின்று போனது. இதற்கிடையே குழந்தைப்பேற்றுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. சத்யா தனது கணவரை சமாதானப் படுத்தி, குழந்தைப் பேற்றின் போது கணவர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார். கடந்த திங்களன்று கடைசியாக அவர் மருத்துவமனை பரிசோதனைக்குச் சென்ற போது மகப்பேறு மருத்துவர்கள் ‘குழந்தைப் பேற்றுக்கான வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம், சீக்கிரத்தில் நீ தாயாகப் போகிறாய். அதற்கான முன்னேற்பாடுகளுடன் தயாராக இரு” என்று அறிவுறுத்தியிருந்தனர். இதற்கு நடுவில் சத்யா நாள் நெருங்கி விட்டது, எப்படியாவது கணவரை தன்னுடன் அழைத்துச் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் போலூரில் அவரது தாய் வீட்டிலிருந்து கணவர் குமார் இருக்கும் சேத்பட்டுக்கு பேருந்தில் பயணித்தார்.

Story image

சுபத்தில் முடிந்த பயணம்:

பேருந்து போலூரில் இருந்து சேத்பட்டை நெருங்க மூன்று கிலோமீட்டர் தூரமே இருக்கையில் சத்யாவுக்கு பிரசவ வலி வந்தது. பேருந்தில் பயணித்த பெண்கள் அனைவரும் சத்யாவை அணுகி அவறைச் சுற்றி நின்று கொள்ள. ஆண்கள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி விட்டனர். சற்று நேரத்தில் சத்யாவுக்கு முதலில் ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவசர நிலை கருதி குழந்தை பிறந்ததும் ஓட்டுனர் பேருந்தை சேத்பட் அரசு மருத்துவமனை நோக்கிச் செலுத்தினார், அங்கே மருத்துவமனையில் சத்யாவுக்கு மீண்டும் பிரசவ வலி வந்து ஆண்குழந்தையைப் பிரசவித்தார். பிரசவம் நேரம் நெருங்கிக் கொண்டிருந்த ஆபத்தான சூழ்நிலையில் ஏன் தனியாக பேருந்தில் பயணித்தீர்கள்? என்ற கேள்விக்கு சத்யாவின் பதில்: கடந்த சில வாரங்களாக என் கணவர் என்னைப் பார்க்க வருவதில்லை, என்னோடு பேசுவதும் இல்லை. குழந்தை பிறக்கும் நேரத்தில் கணவருடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் எதைப் பற்றியும் யோசிக்காமல் பேருந்தில் பயணித்தேன். என்பதே.

இதை எப்படி எடுத்துக் கொள்வது?

சத்யாவுக்கு கணவர் மீது அத்தனை காதல் என்றா? ஒரு சாமனியப் பெண் தன் கணவரைச் சமாதானப்படுத்தும் எளிய  முயற்சி என்றா? அல்லது அசட்டு தைரியம் என்றா? எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தனது பிரசவத்தின் போது தன் கணவரும் உடனிருக்க வேண்டும் என்பது உலகப் பெண்களின் ஒருமித்த ஆசை! சிலருக்கு அந்த ஆசை பூ மலர்வதைப் போல வெகு எளிதாக நிறைவேறி விடும். சிலருக்கு இப்படி சாகஷம் எல்லாம் செய்ய வேண்டியாதாகி விடுகிறது. எப்படியோ கடைசியில் பேருந்தில் ஒன்றும், மருத்துவமனையில் ஒன்றுமாய் இரட்டைக் குழந்தை பெற்ற சத்யா கூடிய விரைவில் அவரது கணவரோடு சமாதானமாவாராக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.