ஆரோக்கியம் தான் மிகப் பெரிய பேங்க் பேலன்ஸ்!

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தீர்கள் எனில் உங்க்லது சுவாசம் மிக மிகக் குறுகியதாகவும், மேலோட்டமானதாகவும் இருக்கும். இது முற்றிலும் தவறான சுவாசமுறை. சுவாசம் ஒரே சீராக இருந்தால் தான் நமது நுரையீரல்
ஆரோக்கியம் தான் மிகப் பெரிய பேங்க் பேலன்ஸ்!

சுத்தமான காற்று மற்றும் ஆரோக்கியமான நுரையீரலை வலியுறுத்தும் NAPCON 2016 எனும் நுரையீரல் தொடர்பான நோய்கள் குறித்த மாநாட்டின் சிறப்புத் தூதராக பாலிவுட் நடிகர் அனில் கபூர்  நியமிக்கப் பட்டுள்ளார். அது தொடர்பாக சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் ஆர்ரோக்கியம் தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய பேங்க் பேலன்ஸ் என்று கூறினார். அதோடு பணத்தைக் கொண்டு நம்மால் தூய்மையான நுரையீரலையோ, தூய்மையான மனதையோ, தூய்மையான இதயத்தையோ எளிதில் விலைக்கு வாங்கி விட முடியாது என்றும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைபிடித்தால் மட்டுமே அவையெல்லாம் கிடைக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்றும் கூறினார்.
மேலும் ‘தனது குடும்பத்தின் ஆரோக்கியம் என்று வரும் போது உடலாலும் சரி, மனதாலும் சரி தான் ஒரு முறைக்கு இருமுறை தீர ஆலோசித்து விட்டு பிறகே அந்தப் பொருட்களை வாங்கத் துணிவதாகவும், அதே சமயம் தனது குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று நம்பும் எதை வாங்கவும் தான் மறுமுறை யோசித்ததே இல்லை எனவும் அவர் தெரிவித்தார். எதெல்லாம் ஆரோக்கியமானதோ அவற்றை வாங்க கையெழுத்திட்ட பிளாங் செக் தரக் கூட தான் தயங்கியதே இல்லை என்று கூட அவர் தெரிவித்தார்.
தினமும் காலையில் விழித்தெழும் போது ஒவ்வொருவரும் முதலில் செய்ய வேண்டியது தங்களது சுவாசம் எப்படி இருக்கிறது என்பதைச் சோதிக்கும் வேலையைத் தான். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தீர்கள் எனில் உங்க்லது சுவாசம் மிக மிகக் குறுகியதாகவும், மேலோட்டமானதாகவும் இருக்கும். இது முற்றிலும் தவறான சுவாசமுறை. சுவாசம் ஒரே சீராக இருந்தால் தான் நமது நுரையீரல் ஆரோக்கியமானதாக இருக்கிறது என்று பொருள். எனவே தினமும் முதல் வேலையாக உங்களது சுவாசம் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்வதை முதல் வேலையாக வைத்துக் கொண்டு அதிலிருந்து உங்கள் ஆரோக்கியத்தை கணக்கிடுங்கள். ஏனெனில் ஆரோக்கியம் தான் மனிதனின் மிகப்பெரிய பேங்க் பேலன்ஸ்’ என்றும் அனில் கபூர் தெரிவித்தார். 
தற்போது அனில் கபூருக்கு வயது 59. இந்த வயதிலும் அவர் அலுப்பின்றி பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதற்கு ஆரோக்கியம் குறித்த அவரது தெளிவான பார்வையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com