மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கேரளா பத்மநாபசுவாமி கோயிலுக்கு இனிமேல் சுரிதார் அணிந்து செல்லலாம்!

சேலையைக் காட்டிலும், சுடிதார், சல்வார் கமீஸ் ஆகிய தளர்வான ஆடைகளை அணிவதே தங்களுக்கு செளகரியமாக உள்ளதாக அக்கோயிலுக்கு வரும் பெண்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

News image
Updated On :30 நவம்பர் 2016, 5:09 am

DIN

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பல நூற்றாண்டுகள் பழைமையான பத்மநாப சுவாமி கோயிலில் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.
பழமை வாய்ந்த இந்தக் கோயிலின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்க, பெண்கள் இறுக்கமான ஆடைகளையும், சுடிதார், சல்வார் கமீஸ், ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகளையும் அணிந்து கொண்டு கோயிலுக்கு வருவதற்கு நிர்வாகம் கட்டுப்பாட்டு விதித்திருந்தது.
இந்நிலையில், சேலையைக் காட்டிலும், சுடிதார், சல்வார் கமீஸ் ஆகிய தளர்வான ஆடைகளை அணிவதே தங்களுக்கு செளகரியமாக உள்ளதாக அக்கோயிலுக்கு வரும் பெண்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பத்மநாப சுவாமி கோயிலுக்குள் பெண்கள் சுடிதார் ஆடையை அணிந்து வர அனுமதி கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அண்மையில் நடந்த அந்த வழக்கு விசாரணையின்போது, பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்படுத்திக் கொள்வது குறித்து கோயில் இணை ஆணையர் 30 நாள்களுக்குள் முடிவு செய்யுமாறு கூறிய நீதிபதிகள், அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், பெண் பக்தர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கோயில் இணை ஆணையருக்கு பல்வேறு கடிதங்களை அனுப்பியிருந்தனர். இதைத் தொடர்ந்து, பத்பநாப சுவாமி கோயிலுக்கு வரும் பெண்கள், சுடிதார், சல்வார் கமீஸ் ஆகிய தளர்வான ஆடைகளை அணிந்து வரும் வகையில் ஆடைக் கட்டுப்பாட்டில் தளர்வு செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அக்கோயிலுக்கு சுடிதார் அணிந்து வந்த பெண்கள் செவ்வாய்க்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.