தங்களது ஆதார் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள நினைப்பவர்கள், திங்களன்று செயல்பட உள்ள 303 நிலையான மையங்களில் தங்களுக்குத் தேவையான திருத்தங்களை செய்து கொள்ள அணுகலாம் என தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. புதிதாக ஆதார் அட்டைகள் பதிவு செய்து கொள்பவர்கள் மற்றும் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டை விரல் ரேகை பதிவு செய்ய எந்த விதக் கட்டணமும் இல்லை. ஆனால் ஆதார் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள நினைப்பவர்கள் ரூ.15 கட்டணம் செலுத்த வேண்டும். யாரெல்லாம் தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், வீட்டு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றில் திருத்தம் செய்ய நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில், குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சென்று தங்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.
கட்டை விரல் ரேகை, கண் விழித்திரை ரேகை, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை மாற்ற விரும்புபவர்கள் ரூ.15 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேலும் ஆதார் அட்டைகளை பிரிண்ட் எடுக்க வேண்டுமெனில் 10 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பு கூறுகிறது.
இது குறித்து மேலதிக விவரங்கள் பெற 1800 425 2911 எனும் இலவச எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


