பாலிவுட் ஹீரோயின் ஆகும் விருப்பமில்லை, சிறந்த டாக்டராகவே விரும்புகிறேன்: மானுஷி சில்லார்!

மானுஷி சில்லார் தனது முன்னுரிமை மருத்துவப் படிப்புக்கும், பணிக்கும் தான். சினிமாவுக்கு அல்ல என்று அறிவித்திருப்பது அவரது புத்திசாலித்தனத்தை மட்டுமல்ல சேவை மனப்பான்மையையும்
பாலிவுட் ஹீரோயின் ஆகும் விருப்பமில்லை, சிறந்த டாக்டராகவே விரும்புகிறேன்: மானுஷி சில்லார்!
Published on
Updated on
1 min read

இந்த ஆண்டு உலக அழகிப் போட்டிக்கான விழா நிகழ்வில் ஒரு இந்திப் பாடலுக்கு நடனமாடிய மானுஷி சில்லாரின் தேர்ந்த நடனத்தைக் கண்டவர்கள் அவரை ஒரு பாலிவுட் நடிகை என்றே நினைத்துக் கொண்டார்களாம். ஆனால் மானுஷி ஒரு மருத்துவ மாணவி என்பது தான் இன்று இந்தியா முழுக்கத் தெரியுமே! ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு நல்ல ராசி உண்டு, அது என்னவென்றால் உலக அழகிப்போட்டி( Miss World), அண்ட அழகிப் போட்டிகளில்( Miss Universe)  எல்லாம் ஜெயித்தவர்கள் உடனே அடுத்தாகச் சென்று செட்டிலாக விரும்பும் இடம் பாலிவுட் அல்லது ஹோலிவுட்டாகத்தான் இருக்கும். இந்த விஷயத்தில் முன்னோடிகளாக முன்னாள் உலக அழகிகள், அண்ட அழகிகள் என ஐஸ்வர்யா ராய் முதல் லாரா தத்தா, சுஷ்மிதா சென், ப்ரியங்கா சோப்ரா எனப் பலர் உதாரணங்களாக இருக்கையில் மானுஷியின் ஆசையும் அதுவாகவே இருக்கலாம் எனப் பலர் நினைக்கலாம். ஆனால், அவர்களது எண்ணத்தைப் பொய்யாக்கி இருக்கிறார் மானுஷி. 

தற்போது ஹரியானாவில் வசிக்கும் மானுஷி சில்லார். சோனேபேட்டில் இருக்கும் பகத் போல்சிங் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இறுதி ஆண்டு மருத்துவ மாணவியான மானுஷ் சில்லாருக்கு எதிர்காலத்தில் தானொரு சிறந்த இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணராகவும், பெண்களுக்கான மாதவிடாய் பாதுகாப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அது குறித்த சிறப்புப் பாடங்களிலும் பட்டங்கள் பெற்று மருத்துவச் சேவை செய்வதில் தான் விருப்பம் இருக்கிறதாம்.

அடிப்படையில் மிகச்சிறந்த கவிஞராகவும், ஓவியராகவும், குச்சிப்புடி நடனக் கலைஞராகவும் திகழும் மானுஷி சில்லார் தனது முன்னுரிமை மருத்துவப் படிப்புக்கும், பணிக்கும் தான். சினிமாவுக்கு அல்ல என்று அறிவித்திருப்பது அவரது புத்திசாலித்தனத்தை மட்டுமல்ல சேவை மனப்பான்மையையும் வெளிக்காட்டுவதாகவே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com