இந்தப் பெண்ணைத் தெரிகிறதா?
ஸ்வேதா பாஸு பிரசாத்- சில வருடங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவர் என்பதாக இவரது பெயர் அனைத்து ஊடகங்களிலும் இடம்பெற்றது. அப்போதும் கூட சிலர், ச்சேச்சே இவரா? அப்படிப்பட்டவராக இருக்க வாய்ப்பில்லையே என்று வருத்தத்துடன் முணுமுணுத்த சத்தமும் காதில் விழாமலில்லை, ஏனெனில் இவர் குழந்தை நட்சத்திரமாக இரட்டை வேடங்களில் கலக்கிய விஷால் பரத்வாஜின் ‘மக்டீ’ இந்திப் படத்தில் தனது நடிப்பிற்காக தேசிய விருது பெற்றிருந்தார். தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். அதில் கருணாஸுக்கு ஜோடியாக நடித்த படம் ‘சந்தமாமா’.
சில வாரங்களாக மாலையில் ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சந்திர நந்தினியின் நந்தினியை எங்கோ பார்த்திருக்கிறோமே! எங்கே என்று யோசித்துக் கொண்டிருந்ததில் இன்று விடை சிக்கியது. அந்த நந்தினி சாட்ஷாத் இதே ஸ்வேதா பாஸு பிரசாத். நந்தினியாக ஸ்வேதாவின் நடிப்பில் சோடை காண முடியாது. அருமையான நடிப்பு, ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு ஸ்வேதா நன்மை செய்திருக்கிறார்.
ஸ்வேதாவுக்கு குழந்தைத் தனமான அழகான முகம். பெண்ணுக்கு நடிப்புத் திறமையும் நிறையவே இருக்கையில் அப்படி ஓர் குற்றச்சாட்டில் ஏன் சிக்கினார் என்பது தான் புரியாத புதிர். எது எப்படியோ அபவாதமாக பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தங்களுடைய திரையுலகப் பயணத்தையே முடித்துக் கொள்ளும் இளம் நடிகைகளில் ஸ்வேதா பாராட்டப்பட வேண்டியவர். ஏனெனில் அப்போதும், இப்போதும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து வந்ததோடு அல்லாமல் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது கலையுலகப் பயணத்தையும் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.
ஹாட்ஸாப் டு யூ ஸ்வேதா @ நந்தினி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - ரிஷபம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


