புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நிரந்தரக் காது கேளாமைக்கு வழிவகுக்கும் ஹெவி டோஸ் ஆண்ட்டி பயோட்டிக்குகள்! 

மேலும் அமினோ கிளைக்கோஸைட் ஆண்ட்டி பயோடிக் மருந்துகள் மனித உடலின் புரதத் தொகுப்பு மண்டலத்தையும் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மனித வாழ்வை அச்சுறுத்தும் பல நோய்த்தொற்றுப் பிரச்சினைகளைத் தீர்க்க இந்த

News image
Updated On :25 பிப்ரவரி 2017, 9:50 am

ஹரிணி

சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் நோய்க்காக எடுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்த ஆண்ட்டிபயோட்டிக் மருந்துகளால் காது கேட்காமல் போவதற்கும் வாய்ப்புகள் உண்டாம்.

மேலும் இந்த மருந்துகளால் நிரந்தர காது கேளாக் குறைபாடு, சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுவதிலுமிருந்து நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் குடல் பாதிப்புகளுக்கு உட்பட்ட  சுமார் 70,000 நோயாளிகள் அமினோ கிளைக்கோஸைட் ஆண்ட்டி பயோடிக்குகளைப் பயன்படுத்தி வருகிறார்களாம். அவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் சுவாசக் குழாய்களில் நோய் தொற்றுக்காக சக்தி வாய்ந்த ஹெவி டோஸ் ஆன்ட்டி பயோட்டிக்ஸ் எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பிற நோயாளிகளை விட 4.79 முறை நிரந்தர காது கேளாமை பாதிப்புக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மாதிரியான நோயாளிகளை தனிமைப்படுத்தினாலோ அல்லது மன உளைச்சலுக்கு உட்படுத்தினாலோ மன நல வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமிருக்கிறதாம்.

மேலும் அமினோ கிளைக்கோஸைட் ஆண்ட்டி பயோடிக் மருந்துகள் மனித உடலின் புரதத் தொகுப்பு மண்டலத்தையும் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மனித வாழ்வை அச்சுறுத்தும் பல நோய்த்தொற்றுப் பிரச்சினைகளைத் தீர்க்க இந்த புரதத் தொகுப்பு மண்டலங்கள் மிகவும் அவசியமானவை. மேலும் இந்த மருந்துகள் மனித செவிப்புலனின் உட்செவி அமைப்பையும் பாதிப்பதோடு, சிறுநீரகக் கோளாறுகளையும் தோற்றுவிக்கிறது.

நுரையீரலில் தீவிரமான நோய்த்தொற்றுக்கு ஆளான நோயாளிகளிடையே காது கேளாமை பிரச்சினையை ஆரம்ப நிலையிலேயே தடுப்பதோ அல்லது கண்டறிவதோ மிகவும் கடினமான விசயம், ஏனெனில் அவர்கள் முன்னதாக நோய்த்தொற்றுதலினால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி இருப்பார்கள் என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட தலைமை ஆய்வாளர் ஏஞ்சலா கார்னிஷ். 

15 லிருந்து 63 வயதுகுட்பட்ட சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 81 நோயாளிகளிடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த உண்மைகள் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.