பரிசுகள்
இப்போட்டிக்கு வரப்பெற்ற கட்டுரைகளிலிருந்து, சிறுவர்கள், இளைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாகப் பரிசுக்குரிய கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். முதல் பரிசுக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 100,000 ஜப்பானிய யென் பரிசும் (ரூ.59,000), பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். இரண்டாவது பரிசாக இருவருக்கு 50,000 ஜப்பானிய யென் பரிசும் (ரூ.29,488), பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். மூன்றாவது பரிசாக ஐந்து நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசுப்பொருளும் அளிக்கப்படும். இது தவிர, சிறப்புக்குரியவர்களாக (Honorable Mention) 25 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும், பரிசுப்பொருளும் வழங்கப்படும்.