Enable Javscript for better performance
lipstick under my burkha movie| ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ என்றொரு திரைப்படம்!- Dinamani

சுடச்சுட

  

  பெண்களின் பாலியல் சமஉரிமை குறித்துப் பேசும் ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ என்றொரு திரைப்படம்!

  By சரோஜினி  |   Published on : 20th July 2017 01:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  lipstick_under_my_burkha

   

  பெண்கள் ஒன்றும் கற்சிலைகள் அல்லவே... அவர்களுக்கும் தாம்பத்ய திருப்தியில் சரிபாதி பங்கு கொள்ள உரிமை உண்டே! தாம்பத்யத்தில் ஆணுக்கு உள்ள அத்தனை எதிர்பார்ப்புகளும் அணுவளவும் குறையாது பெண்ணுக்கும் உண்டு; ஆனால் நமது குடும்ப அமைப்பு சார்ந்து அதைபற்றிப் பேச தென்னிந்திய சினிமாக்களில் சிலதயக்கங்கள் இருந்த போதும், இந்தியில் அப்படி எந்த விதமான தயக்கங்களும் இல்லாது போனதின் விளைவாக பெண்களின் பாலியல் தேவைகளை சம உரிமை தந்து பேச பல படங்கள் முன் வந்திருக்கின்றன. தீபா மேத்தாவின் திரைப்படங்கள் அத்தகைய உதாரணங்களில் சில. ஏக்தா கபூர் தனது டெலி சீரியல்களில் கூட அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசி விவாதிக்கக் கூடிய வகையிலான திரைக்கதை அம்சங்களைக் கையாளக் கூடியவர். எனவே விநியோக உரிமை பெற்றுள்ள ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ எனும் திரைப்படம் அப்படியான திரைப்படங்களில் ஒன்றாக அமைந்ததில் ஆச்சர்யமில்லை.

  இதுவரை உலகில்; பல்வேறு திரைப்பட விழாக்களில் ரிலீஸ் செய்யப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படத்திற்கான ப்ரிவியூ ஷோ வைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்ற சில பாலிவுட் பிரபலங்கள்;

  “இது மிக வேடிக்கையான திரைப்படம், ஆனால் இந்த சமூகத்துக்கு இது மிக மிக அவசியமான திரைப்படமும் கூட”

  என்று கமெண்ட் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படம் இந்தியாவில் நாளை வெளியாகவிருக்கிறது.

  மிக அழுத்தமாக பெண்ணியக் கருத்துகளை முன்வைக்கும், முற்றிலும் பெண்ணுரிமை பேசும் இத்திரைப்படத்தை வெளியிட தடையில்லாச் சான்றிதழ் அளிப்பதில் தணிக்கைத் துறைக்கு சில தயக்கங்கள் இருந்தன. பின் இவ்விஷயத்தில் ‘திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு நீதிமன்றம்’ தலையிட்டு, தணிக்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து படத்துக்கு ‘A' சான்றிதழ் வழங்குமாறு பரிந்துரைத்தது. அந்தத் தடைகளை எல்லாம் மீறி படம் நாளை இந்தியா முழுதும் வெளியாகவிருக்கிறது. 

  ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ என்பது 4 பெண்களின் கதை. சமுதாயத்தில் பெண்களுக்கான பாலியல் சமநிலையின் அவசியம் குறித்து விவாதிப்பதில் தயக்கம் காட்டும் இந்தியா போன்ற பிற்போக்கு சமூகத்தில் விடாது போராடி தங்களுக்கான சம உரிமையை நிலைநாட்டும் 4 பெண்களின் வாழ்க்கையே ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ திரைப்படம். அந்த 4 பெண்களாக திரையில் வாழ்ந்திருப்பவர்கள்... கொங்கனா சென் ஷர்மா, ரத்னா பதக்‌ஷா, அஹானா கும்ரா, மற்றும் லபிதா போர்தகுர் இவர்கள் நால்வரும் தான். இவர்களுடன் சுஷாந்த் சிங் மற்றும் விக்ராந்த் மஸ்ஸே இருவரும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

  இத்திரைப்படத்தை இயக்கியது அலங்க்ரிதா ஸ்ரீவத்ஸவா, தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா, விநியோக உரிமை ஏக்தா கபூருக்கு!

  முன்னதாக படத்தைப் பற்றிய பிரபலங்களின் ட்விட்கள் சில;

  ஷ்ரத்தா கபூரின் ட்வீட்...

   கல்கி கோச்சலினின் ட்விட்...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai