மத்திய அமைச்சர் வெறும் கைகளால் புகையிலைக் கறையைக் கழுவினால் அதெப்படி ‘தூய்மை இந்தியா’ வுக்கான முன்னுதாரணம் ஆகும்?!

மத்திய அமைச்சர் ஒருவர், அவரது உதவியாளர்களோ அல்லது இதர துப்புரவுப் பணியாளர்களோ ஸ்கிரப்பர் கொண்டு வந்து தருவதற்குள், அவசரப்பட்டு வெறும் கைகளால் சுவர்களில் இருந்த புகையிலைக் கறைகளை தேய்த்துக் கழுவி சுத்த
மத்திய அமைச்சர் வெறும் கைகளால் புகையிலைக் கறையைக் கழுவினால் அதெப்படி ‘தூய்மை இந்தியா’ வுக்கான முன்னுதாரணம் ஆகும்?!

இன்று சில ஊடகங்களில் முக்கியச் செய்தியாக இடம்பெற்றிருந்த செய்தியொன்று, மத்தியச் சுற்றுலாத்துறை அமைச்சரான அல்ஃபோன்ஸ் கண்ணந்தனம் என்பவர் பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டப்பணிகளை செயல்படுத்தும் அமைச்சர்களில் ஒருவராக, டெல்லி மாநகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார். எப்படித் தெரியுமா? அவருடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்ட துப்புறவு ஊழியர்களெல்லாம் கைகளில் பாதுகாப்பு உறை மாட்டிக் கொண்டு துப்புறவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க மத்திய அமைச்சர் மாத்திரம் வெறும் கைகளாலேயே புகையிலைக் கறை படிந்த சுவர்களைச் சுத்தம் செய்யத் தொடங்கி விட்டாராம். இது அங்கிருந்த மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது என சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது?! 

சுவர்களில் இருக்கும் புகையிலைக் கறையை நீக்க வேண்டுமானால், அதற்குத் தோதான இரும்பு ஸ்கிரப்பர்கள் கொண்டும் அதற்கான தூய்மை சோப்புகளோ அல்லது திரவங்களையோ பயனப்டுத்தித் தானே சுத்தம் செய்தாக வேண்டும். அதிலும் நீண்ட காலங்களாகச் சுத்தப் படுத்தாமல் சுவர்களில் தங்கி விட்ட புகையிலைக் கறைகளில் நிச்சயம் கிருமிகளின் தாக்கம் இருக்கும். அத்தகைய கறைகளைச் சுத்தம் செய்யும் போது நாட்டின் மத்திய அமைச்சராகப் பட்டவர் கைகளில் பாதுகாப்பு உறை மாட்டிக் கொள்வதோடு அல்லாமல் நீண்ட கைப்பிடி கொண்ட ஸ்கிரப்பர்கள் உபயோகித்து தானே சுத்தம் செய்திருக்க வேண்டும்! அது தானே பொதுமக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் இருந்திருக்கக் கூடும்.

மத்திய அமைச்சர் ஒருவர், அவரது உதவியாளர்களோ அல்லது இதர துப்புரவுப் பணியாளர்களோ ஸ்கிரப்பர் கொண்டு வந்து தருவதற்குள், அவசரப்பட்டு வெறும் கைகளால் சுவர்களில் இருந்த புகையிலைக் கறைகளை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்த விதம் மக்களுக்கு எந்த விதத்தில் பயனளிக்கக் கூடும்?! வெறுமே பரபரப்பான பேச்சுக்கு மட்டுமே இம்மாதிரியான விஷயங்கள் இடமளிக்கக் கூடும். இதெல்லாம் தூய்மை இந்தியா நிர்வாகிகளுக்குத் தெரியாதா? திட்டத்துக்கான பெயரை ‘தூய்மை இந்தியா’ என வைத்துக் கொண்டு எது உண்மையான தூய்மை எனத் தெரியாமல் செயல்பட்டால் எப்படி?!

Thanks to NDTV.Com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com