எய்ட்ஸ் கை குலுக்குவதன் மூலமோ / ஒரே அலைபேசி பயன்படுத்துவதன் மூலமோ பரவுமா? ஆம், பரவும் என்கிறது இந்த பஞ்சாப் பிரச்சாரம்!

பஞ்சாப் மாநில எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார அமைப்பு வெளியிட்டுள்ள அந்தப் கையேட்டுப் பிரதியிலுள்ள வாசகங்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்;
எய்ட்ஸ் கை குலுக்குவதன் மூலமோ / ஒரே அலைபேசி பயன்படுத்துவதன் மூலமோ பரவுமா? ஆம், பரவும் என்கிறது இந்த பஞ்சாப் பிரச்சாரம்!

இந்தியா முழுவதும், எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அனைத்திலும் எய்ட்ஸ் நோய் , அந்நோய் பாதிப்பு அடைந்தவர்களுடனான கை குலுக்குதலின் மூலமாகவோ, அல்லது அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களைப் பயன்படுத்துவதாலோ பரவுவதில்லை. அதனால் எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களை மேற்கண்ட காரணங்களைக் கூறு தனிமைப்படுத்தி அவர்களது நோயின் தாக்கத்தை அதிகரித்து விடக்கூடாது எனும் மனிதாபிமானமுள்ள பிரச்சாரங்கள் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கையில் பஞ்சாப் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ( PSACS) சமீபத்தில் வெளியிட்ட அதன் எய்ட்ஸ் பிரச்சாரக் கையேடு ஒன்றில் அச்சிடப்பட்டிருக்கும் எய்ட்ஸ் காரணிகள் உலகம் முழுக்க வாழும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரகர்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

அந்தப் பிரச்சாரக் கையேடு எய்ட்ஸ் நோய்க்காரணிகளாக குறிப்பிட்டிருப்பது உலகின் தொன்று தொட்ட மூடநம்பிக்கைகளையே; இதுநாள் வரை அந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து தான் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரகர்கள் உலகம் முழுக்கப் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், மேடை நாடகங்கள், குறும்படங்கள், பாடல்கள் எனப் பல்வேறுவிதமாகத்  தமது  எதிர்ப்புணர்வைக் காட்டி வருகிறார்கள். அவற்றின் மூலமாக மக்கள் சிறிது, சிறிதாக மனமாற்றம் அடைந்து எய்ட்ஸ் நோய் என்பது இன்னின்ன விதங்களில் எல்லாம் பரவாது. அது நோய்ப்பாதிப்பு கொண்டவரோடு உடல் ரீதியான உறவு கொள்ளும் போதும், ரத்த தானம் பெறும் போதும் மட்டுமே பரவும் என ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது ஒரு மாநில அரசின் பிரச்சார அமைப்பு கொஞ்சம் கூட பொறுப்புணர்வே இல்லாமல் மக்களின் பழைய மூடநம்பிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் மீண்டும் அவற்றை உண்மை என அச்சிட்டு பிரச்சாரக் கையேடுகளை வழங்கி இருப்பதை என்னவென்று சொல்ல;

பஞ்சாப் மாநில எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார அமைப்பு வெளியிட்டுள்ள அந்தப் கையேட்டுப் பிரதியிலுள்ள வாசகங்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்;

  • எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவருடன் கை குலுக்கினால் அந்த நோய் பிறருக்கும் பரவக்கூடும்.
  • எய்ட்ஸ் பாதிக்குள்ளானவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களைப் பயன்படுத்தினாலும் கூட எய்ட்ஸ் பிறருக்கு பரவும்.
  • எய்ட்ஸ் நோயாளிகள் பயன்படுத்திய அலைபேசிகள் மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்களைப் பிறர் பயன்படுத்தினாலும் கூட எய்ட்ஸ் பரவக்கூடும்.
  • எய்ட்ஸ் நோயாளிகள் பயன்படுத்திய கழிவறைகளைப் பயன்படுத்தினால் கூட பிறருக்கும் அந்நோய் பரவக்கூடும்.  இத்யாதி, இத்யாதி...

இப்படி... மருத்துவ ரீதியான ஆதாரங்கள் எதுவுமற்ற மேற்சொன்ன காரணங்களை எதிர்த்து தான் காலங்காலமாக மேன்மையான கல்வியாளர்களும், சமூக சேவை அமைப்பைச் சார்ந்தவர்களும், எய்ட்ஸ் நோயாளிகள் மேல் கருணை கொண்டவர்களும் போராடி வருகிறார்கள். ஆனால் அவர்களையும் அவர்களது சமூகப் பங்களிப்பையும் கொஞ்சமும் மதிக்காமல், எய்ட்ஸ் நோயாளிகளை மேலும் பீதியில் ஆழ்த்தி தனிமைப்படுத்தும் விதமாக இப்படி ஒரு கையேட்டைத் தயாரித்து விநியோகித்து வருகிறது பஞ்சாப் மாநில எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சார மையம் (PSACS) !

Article courtsy: India Today

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com