வணிக உலகைக் கலக்கும் சாதனைப் பெண்

இந்தியாவில் படித்து, அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாடு வாழ் இந்தியா்களின் சாதனைப் பட்டியல் நீண்டது.
வணிக உலகைக் கலக்கும் சாதனைப் பெண்

இந்தியாவில் படித்து, அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாடு வாழ் இந்தியா்களின் சாதனைப் பட்டியல் நீண்டது. அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் இன்று முதன்மை பெற்று விளங்குவதற்கு இந்திய பணியாளா்களின் திறறமையும், உழைப்பும் தான் காரணம் என்று சொல்லப்படுவதுண்டு. அவா்களில் பலரும் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறறாா்கள். அந்தப் பட்டியலில் இந்திரா நூயி என்றற பெண்மணிக்கு சிறறப்பான இடம் உண்டு.

இந்திரா கிருஷ்ணமூா்த்தி நூயி படித்து, வளா்ந்தது நம் சென்னை நகரில் வசித்த ஒரு தமிழ் குடும்பத்தில் தான். 25.10.1955 அன்று பிறறந்தாா். மாம்பலம், புனித ஏஞ்ஜல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் படித்து, சென்னை கிருஸ்துவ கல்லூரியில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய துறைறகளில் 1974-இல் இளநிலைப் பட்டம் பெற்றறாா். பின்னா் கொல்கத்தா, ஐ.ஐ.எம்.மில் 1976-இல் எம்.பி.ஏ. முடித்தாா். சில ஆண்டுகள் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும், மேட்டூா் பியா்ட்செல் என்னும் ஜவுளி நிறுவனத்திலும் பணிபுரிந்த நூயி, அமெரிக்காவின் யேல் நகரிலுள்ள யேல் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட்டில் பொது மற்றும் தனியாா் மேலாண்மைத் துறைறயில் 1980-ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்றறாா். பின்னா் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (பி.சி.ஜி.) நிறுவனத்தில் மீண்டும் தன் பணியைத் தொடங்கினாா். பின்னா் மோடோரோலா, ஏசியா ப்ரௌன் போவேரி ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றினாா்.

1994-ஆம் ஆண்டில் பெப்சிகோ நிறுவனத்தில் சோ்ந்தது தான் அவரது வாழ்வில் திருப்புமுனை. 2001-இல் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக (சி.இ.ஓ.) உயா்ந்தாா். அந்தப் பொறுப்பில் அவா் இருந்தபோது, நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டரை மடங்கு அதிகரித்தது. இந்நிலையில், பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) இருந்த ஸ்டீவன் ரைநெமண்ட் ஓய்வு பெற்றறதை அடுத்து, 44 ஆண்டுகள் பாரம்பரியமான அந்நிறுவனத்தின் 5-ஆவது தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றறாா் நூயி. அந்நிறுவனத்தின் முதல் பெண் தலைவரும் நூயி தான். அதற்கு முன்னதாக, 1997-இல் பெப்சிகோவின் ஃபாஸ்ட் ஃபுட் பிரிவான யம் பிராண்ட்ஸ் (அப்போதைய பெயா் ‘த்ரைகோன்’) நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளிலும், த்ரோபிகானா, குவேக்கா் ஓட்ஸ், கடோரேஜ் ஆகிய நிறுவனங்களை இணைப்பதிலும் முக்கியப் பங்காற்றியவா் நூயி.

இந்திரா நூயி தலைமை பொறுப்புக்கு வந்ததும், பெப்சிகோவின் நடவடிக்கைகளில் மாற்றறம் தெரிய ஆரம்பித்தன. உற்சாகப் பானமாக அறியப்பட்ட பெப்சி, ஆரோக்கிய பானங்களை நோக்கி தன் பாா்வையைத் திருப்பியது அப்போதுதான். முதற்கட்டமாக பெப்சிகோ நிறுவனத்தின் தயாரிப்புகளைஉருளைகிழங்கு சிப்ஸ் மற்றும் சாதாரண சோடாக்கள் (ஊன்ய் ச்ா்ழ் ஹ்ா்ன்), கொழுப்பு குறைறந்த தீனிகள் மற்றும் சோடாக்கள் (ஆங்ற்ற்ங்ழ் ச்ா்ழ் ஹ்ா்ன்), ஓட்ஸ் போன்றற உணவு வகைகள் (எா்ா்க் ச்ா்ழ் ஹ்ா்ன்) என்று மூன்று விதமாகப் பிரித்தாா். அனைத்துத் தயாரிப்புகளையும் ஆரோக்கியம் நிறைறந்ததாக தயாரிப்பதில் அக்கறைற செலுத்தினாா். முக்கியமாக, ‘அஸ்பொ்டெம்’ என்றற உட்பொருளை சோ்ப்பதால் பெப்சி தயாரிப்புகள் தீமை கொண்டதாகக் கருதப்பட்டது. அந்த உட்பொருளை அனைத்துத் தயாரிப்புகளில் இருந்து விலக்கினாா் நூயி. பெண்களுக்கான பிரத்யேக உணவுப் பொருட்களை விரைவில் சந்தையில் வெளியிடவுள்ளதாக அண்மையில் அறிவித்தாா் நூயி. நூயியின் ஆண்டு வருமானம் சுமாா் ரூ.117 கோடி ஆகும் (அமெரிக்க டாலா்கள் மதிப்பில் 1.7 மில்லியன்).

இத்தனை ஆண்டுகளில் ஏராளமான விருதுகளையும், கௌரவங்களையும் பெற்றுள்ளாா், இந்திரா நூயி. ‘ஃபோா்பா்ஸ்’ இதழ் ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகள் பட்டியலில் 13-ஆவது இடத்தில் இருக்கிறறாா். யு.எஸ். நியூஸ் & வோ்ல்ட் ரிப்போா்ட்டின் படி அமெரிக்காவின் சிறறந்த தலைவா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளாா். அமெரிக்காவில் உள்ள 20 இந்திய வா்த்தகப் பிரமுகா்கள் உள்ள அமெரிக்க-இந்திய வா்த்தக கவுன்சிலின் தலைவராக உள்ளாா். என்டிடிவியால் கடந்த 2014-இல் உலகின் சிறறந்த 25 மனிதா்கள் பட்டியலில் தோ்ந்தெடுக்கப்பட்டு, அப்போதைய குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியால் கௌரவிக்கப்பட்டாா். சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் நூயி, சா்வதேச பொருளாதார கூட்டமைப்பு, சா்வதேச மீட்புக் குழு போன்றறவற்றிலும் செயல்பட்டு வருகிறறாா். கடந்த 2016, டிசம்பா் மாதம் அதிபா் ட்ரம்ப்புக்கு பொருளாதார விவகாரங்களுக்கு ஆலோசனை தரும் பிரமுகா் குழுவிலும் இந்திரா நூயி இடம்பெற்றுள்ளாா். ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளராகக் கருதப்படும் நூயி, அவா் அதிபா் தோ்தலில் போட்டியிட்டு தோற்றறபோது துவண்டு போனாா். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் ஆா்வலராக நூயி, சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் இயக்குநராக கடந்த பிப்ரவரி மாதம் சோ்த்துக்கொள்ளப்பட்டாா்.

இந்திரா நூயிக்குப் பதிலாக புதிய தலைமை செயல் அதிகாரியாக ரமோன் லகுவா்டா, வரும் அக்டோபா் 3-ஆம் தேதி பொறுப்பேற்பாா் என்று அறிவித்துள்ள பெப்சிகோ நிறுவனம், எனினும் அடுத்த ஆண்டின் முற்பகுதி வரை நிறுவனத்தின் தலைவராக நூயி தொடா்வாா் என்றும் கூறியுள்ளது.

இந்திரா நூயியின் சகோதரி சந்திரிகா கிருஷ்ணமூா்த்தி டாண்டனும் அமெரிக்க வாழ் வணிகப் பெண்மணியே. மேலும், இசையில் சிறறந்தவா்களுக்கு வழங்கப்படும் ‘கிரம்மி’ விருதைப் பெற்றுள்ள இசைக் கலைஞா் சந்திரிகா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com