ஏர் இந்தியாவில், விமானப் பணிப் பெண்ணாக பணி புரிந்தவர் பூஜா சின் சான்கர். ஒரு தாய் தான் நல்ல நிலையில் இருந்தால் அதேபோன்று, தன் மகளும் இருக்க வேண்டும் என விரும்புவார்.
அந்த வகையில், பூஜா சின் சான்கரின் மகள் அஷ்ரிதாவும், ஏர் இந்தியாவில்தான் பணிபுரிகிறார். ஆனால் விமானப் பணிப்பெண்ணாக அல்ல, விமானியாக உள்ளார்.
இந்த நிலையில், பணி ஒய்வு பெறும் தாய்க்கு, ஒரு நூதன ஆசை. தன் மகள் விமானம் ஓட்ட, தனது இறுதி நாள் வேலையை அதில் நிறைவு செய்ய வேண்டும் என்று.
இது பற்றி, ஏர் இந்தியாவிற்கு ஒரு கோரிக்கையாக, பூஜா வைத்தபோது, நிர்வாகம் அதனை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டது.
பூஜா கடைசி நாள் வேலையை நிறைவு செய்த விமானத்தை, அவருடைய மகள் அஷ்ரிதாவே ஓட்டினார். பலன்... ஓய்வு பெற்ற தாயை வரவேற்க வேண்டிய மகள், தானே .. தாயை, ஓய்வுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! இலங்கை அணி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 - இன்றைய நேரலை! (ஆக. 12)

யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறார்! அமைச்சருக்கு ஓபிஎஸ் பதில்!

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

முதல்வரின் தீர்மானத்தை எதிர்க்கிறோம்! ஆனால் இதை ஆதரிக்கிறோம்! | EPS | ADMK | TVK



