தினமணி.காம் பெஸ்ட் செல்ஃபீ 2017 போட்டியில் தேர்வான செல்ஃபீ!

ஜனவரி மாதத் துவக்கத்தில் தினமணி இணையதளம் சார்பாக பெஸ்ட் செல்ஃபீ போட்டி ஒன்றை அறிவித்திருந்தோம்.
தினமணி.காம் பெஸ்ட் செல்ஃபீ 2017 போட்டியில் தேர்வான செல்ஃபீ!
Published on
Updated on
1 min read

ஜனவரி மாதத் துவக்கத்தில் தினமணி இணையதளம் சார்பாக பெஸ்ட் செல்ஃபீ போட்டி ஒன்றை அறிவித்திருந்தோம். போட்டிக்காக அனுப்பப்பட்ட செல்ஃபீக்களில் சிறந்த ஒன்றை தினமணி இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் லைஃப்ஸ்டைல் பிரிவில் இடம்பெறச் செய்வதாக அறிவித்திருந்தோம். எங்களுக்கு மின்னஞ்சலில் வந்த செல்ஃபீக்களில் இந்தப் பெரியவர் அனுப்பிய செல்ஃபீ மிகுந்த அர்த்தத்துடன் மட்டுமல்ல அப்பாவுக்கும் மகளுக்குமான அன்புப் பிணைப்பையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருந்ததால் இவருடைய செல்ஃபீயை பெஸ்ட் செல்ஃபீ எனத் தீர்மானித்து வெளியிடுவதில் தினமணி இணையதளம் பெருமை கொள்கிறது.

தனது செல்ஃபீயுடன் அ.மாதவன் அவர்கள் அனுப்பியிருந்த மின்னஞ்சல் கடிதம் கீழே...

அன்புடையீர்!

வணக்கம் !

செல்ஃபீ என்பது என்ன? ஒருவர் தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்வது தானே? அந்த வகையில் என்னை நானே எனது 'சாம்சங்' மொபைல் காமிராவில் எடுத்துக் கொண்ட படம்தான் இது. இந்தப் படத்தில் உள்ள  சுவாரசியம் என்னவெனில், புது வருடம் 2018 வருவதையொட்டி நாங்கள் புதிதாக‌ வாங்கிய 'ட்ரெஸ்ஸிங் டேபிள் & கண்ணாடி'யை வெளிநாட்டில் இருக்கும் எங்களது மகளுக்கு உடனே தெரிவிப்பதற்காக எடுத்த 'ஃபோட்டோ'தான் இது. கண்ணாடி முன்பாக படுக்கையில் உட்கார்ந்த படியே என்னை நானே செல்ஃபியாக‌ புகைப்படம் எடுத்துக் கொண்டது.புதிதாக இங்கு வாங்கியுள்ள வீட்டு உபயோகப் பொருளையும் அங்கு தெரிவிக்க வேண்டும்; அதே சமயம் படம் வித்யாசமாகவும் இருக்க வேண்டும் எனும் ஆர்வத்தினால் எடுக்கப் பட்டது. மிக இயல்பாக வந்துள்ளது.  வாய்ப்புக்கு நன்றி !  வணக்கம் !

அ. மாதவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com