வாசகர்களே! 2017 ஆம் ஆண்டின் உங்களது சிறந்த செல்ஃபீ, தினமணி.காமில் பிரசுரமாக வேண்டுமா?

அழகான செல்ஃபீக்களில் சிறந்ததென எண்ணும் ஒரு சூப்பர்ப் செல்ஃபீயை எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள். அது தினமணி.காம் முகப்புப் பக்கத்தின் புகைப்படப் பிரிவில் ‘பெஸ்ட் செல்ஃபீ 2017’ எனும் தலைப்பின்
வாசகர்களே! 2017 ஆம் ஆண்டின் உங்களது சிறந்த செல்ஃபீ, தினமணி.காமில் பிரசுரமாக வேண்டுமா?
Published on
Updated on
1 min read

2017 ஆம் ஆண்டு முடிய இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கடந்த ஆண்டின் நினைவுகளை எல்லாம் பசுமை மாறாமல் நெஞ்சுக்குள் பத்திரமாகப் பதுக்கிக் கொண்டு புத்தாண்டை விமரிசையாக வரவேற்க கொண்டாட்டத்துடன் திட்டமிட்டுக் கொண்டிருப்பீர்கள். நல்லது. ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்ற நன்னூலார் பவணந்தி முனிவர் கூற்றுப்படி நாம் புத்தாண்டைக் கொண்டாட்டத்துடனும், குதூகலத்துடனும் வரவேற்பது தானே முறை! அந்தக் குதூகலத்துக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையிலும்,  உங்களை நீங்களே மீண்டுமொருமுறை ரசித்துக் கொள்ளும் படியாகவும் தினமணி.காம் உங்களுக்கு ஒரு ரசனை மிக்க வாய்ப்பை வழங்கவிருக்கிறது. தினமணி வாசகர்கள் 2017 ஆம் ஆண்டில் தாங்கள் எடுத்துக் கொண்ட பலப்பல அழகான செல்ஃபீக்களில் சிறந்ததென எண்ணும் ஒரு சூப்பர்ப் செல்ஃபீயை எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள். அது தினமணி.காம் முகப்புப் பக்கத்தின் புகைப்படப் பிரிவில் ‘பெஸ்ட் செல்ஃபீ 2017’ எனும் தலைப்பின் கீழ் பிரசுரிக்கப்படும்.

செல்ஃபீ அனுப்பும் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை;

  • செல்ஃபீயில் உங்களது பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • அந்த செல்ஃபீ எடுத்துக் கொள்ளும் போதிருந்த உங்களது குதூகலமான மனநிலையை ரத்தினச் சுருக்கமாக 500 வார்த்தைகளுக்கு மிகாமல் வாசக அனுபவமாக அழகுத் தமிழில் எழுதி அனுப்ப வேண்டும்.
  • அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி dinamani.readers@gmail.com.
  • செல்ஃபீக்கள் எங்களை வந்தடைய வேண்டிய கடைசித் தேதி 15.01.2018
  • தகவல்கள் அற்ற செல்ஃபீக்கள் நிராகரிக்கப்படும்.

இந்தப் புத்தாண்டில் நலமும், வளமும் பெருகட்டும்!
நீங்கள் எண்ணியவை யாவும் ஈடேறட்டும்!

தினமணி வாசகர்கள் அனைவருக்கும் ஆசிரியர் குழு சார்பாக உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Image courtesy: google

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com